உலக அழகி பட்டத்தை டொமினிகன் குடியரசைச் சேர்ந்த ஜோஹெய்ரி மோலா டொமிங்கஸ் வென்றார்

Share

2026-ம் ஆண்டிற்கான உலக அழகி பட்டத்தை டொமினிகன் குடியரசைச் சேர்ந்த 24 வயதான ஜோஹெய்ரி மோலா டொமிங்கஸ் வென்றார். 73-வது உலக அழகிப் போட்டியின் இறுதிச்சுற்று வியட்நாமின் நஹா ட்ராங் நகரில் நடைபெற்றது. உலக அழகிப் போட்டி வியட்நாமில் நடத்தப்படுவது இதுவே முதல் முறையாகும். இந்த ஆண்டு போட்டியில் 111 போட்டியாளர்கள் பங்கேற்றநிலையில், அவர்களை பின்னுக்குத் தள்ளி 2026-ம் ஆண்டுக்கான உலக அழகி பட்டத்தை டொமினிகன் குடியரசைச் சேர்ந்த 24 வயதான ஜோஹெய்ரி மோலா டொமிங்கஸ் வென்றார். இதன் மூலம் டொமினிகன் குடியரசு 44 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் உலக அழகி பட்டத்தை கைப்பற்றியுள்ளது. அந்த நாடு இதற்கு முன்பு 1982-ம் ஆண்டு மரியாசெலா அல்வரெஸ் மூலம் உலக அழகி பட்டத்தை வென்றிருந்தது. இதன் மூலம் ஜோஹெய்ரி மோலா, டொமினிகன் குடியரசின் 2-வது உலக அழகியாகியுள்ளார். 

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>