உலக சுகாதார அமைப்பு பதவியை ஷேக் ஹசீனா மகள் ராஜினாமா செய்தார்

Share

உலக சுகாதார அமைப்பின் தென்கிழக்காசிய பிராந்திய இயக்குநர் பதவியை, வங்காள தேசத்தின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் மகள் சய்மா வாசெத், 53, ராஜினாமா செய்தார்.

வங்காளதேசத்தில் கடந்த 2024-ம் ஆண்டு ஏற்பட்ட மக்கள் புரட்சி காரணமாக, அப்போதைய பிரதமர் ஷேக் ஹசீனா தனது பதவியை இழந்து நாட்டை விட்டு தப்பியோடினார். இந்த அரசியல் அதிரடிகளின் தொடர்ச்சியாக, தற்போது அவரது குடும்பத்தினரையும் ஊழல் புகார்கள் துரத்தத் தொடங்கியுள்ளன. இதன் உச்சகட்டமாக, உலக சுகாதார அமைப்பின் தென்கிழக்கு ஆசிய பிராந்திய இயக்குநராகப் பதவி வகித்து வந்த ஷேக் ஹசீனாவின் மகள் சைமா வாசித் தனது பதவியை அதிரடியாக ராஜினாமா செய்துள்ளார். சீனப் பயணத்தின்போது நிதி மோசடி செய்தது மற்றும் போலி கல்விச் சான்றிதழ் சமர்ப்பித்தது உள்ளிட்ட புகார்களின் பேரில் ஐ.நா. அமைப்பும், வங்காளதேச அரசும் அவர் மீது விசாரணை நடத்தி வந்தன. ஏற்கனவே ஓராண்டாகச் சம்பளம் இல்லாத கட்டாய விடுப்பில் வைக்கப்பட்டிருந்த சைமா, “தலைமை மீது நம்பிக்கை இழந்துவிட்டதால் விலகுகிறேன்” என கடிதம் எழுதியுள்ளார்.

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>