உலக பிசியோதெரபி தினத்தை முன்னிட்டு ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வாழ்த்து தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். உலக பிசியோதெரபி தினம் என்பது 1951 ஆம் ஆண்டில் உலக பிசியோதெரபி அறக்கட்டளையின் தேதியை நினைவுகூரும் வகையில் 1996 ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 8 ஆம் தேதி கொண்டாடப்படும் உலகளாவிய சுகாதார நிகழ்வாகும். பிசியோதெரபி மற்றும் பிசியோதெரபிஸ்டுகளின் பங்களிப்பை அங்கீகரிக்கவும், உடல் இயக்கத்தை மேம்படுத்துவதில் அவர்களின் முக்கியத்துவத்தை மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தவும் இந்த நாள் உருவாக்கப்பட்டது. இந்த நிலையில், ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ உலக பிசியோதெரபி தினத்தை முன்னிட்டு வாழ்த்து தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது: பிசிசோதெரபி என்பது வலி குறைப்பதற்கான ஒரு சிகிச்சை முறை என்பது மட்டுமல்ல, உடல் இயக்கம், செயல்பாடு, செயல்திறன், சுயசார்பு மற்றும் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் தனித்துவமான மருத்துவத் துறையாகும், பக்கவாதம், நரம்பியல் பாதிப்புக்கள், தசை, எலும்பு மற்றும் மூட்டுப் பிரச்சினை, முதுகு தண்டு பாதிப்புக்கள், விளையாட்டின்போது ஏற்படும் காயங்கள், அறுவை சிகிச்சைக்கு பிந்தைய மீட்பு, முதியோர் இயக்க திறன் குறைபாடுகள், மாற்றுத் திறனாளிகளின் புனர்வாழ்வு உள்ளிட்ட பல்வேறு நிலைகளில் பிசியோ தெரபி மருத்துவத்தின் பங்கு முக்கியமானது ஆகும். ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 8 ஆம் தேதி, உலக பிசியோதெரபி தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது. இருதய – இரத்த நாள நோய்கள் மற்றும் பக்கவாதத்தைத் தடுப்பது, மேலாண்மை செய்வது மற்றும் புனர்வாழ்வு அளித்தலில் பிசியோதெரபி மற்றும் உடல் இயக்கத்தின் பங்கு என்று இந்த ஆண்டின் கருப்பொருள் பிசியோதெரபி மருத்துவத்தின் முக்கியத்துவத்தை மக்களிடம் எடுத்து விளக்குகிறது. இந்த ஆண்டு தமிழ்நாடு பிசியோதெரபி மருத்துவர்கள் சங்கம், மாநில அளவிலான பிசியோ தெரபி மாநாடு மற்றும் விருது வழங்கும் விழா ஆகியவைகளை 27.09.2026 அன்று கோவையில் நடத்த உள்ளது. அந்த நிகழ்ச்சி வெற்றி பெறவும், மருத்துவத் துறையில் மனிதநேயத்துடன் மகத்தான வகையில் அரும்பணி ஆற்றிடும் மருத்துவர்களுக்கும், மருத்துவத்துறை சார்ந்தவர்களுக்கும் அன்பான வாழ்த்துக்களை இந்நன்னாளில் தெரிவித்துக் கொள்கிறேன்.
உலக பிசியோதெரபி தினத்தை முன்னிட்டு வைகோ வாழ்த்து தெரிவித்தார்
<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167"
crossorigin="anonymous"></script>
<ins class="adsbygoogle"
style="display:block; text-align:center;"
data-ad-layout="in-article"
data-ad-format="fluid"
data-ad-client="ca-pub-2268409811114167"
data-ad-slot="7294005735"></ins>
<script>
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
</script>