உலக வாய் சுகாதார தினத்தையொட்டி மன்னாரில் ஏற்பாடு செய்யப்பெற்ற விழிப்புணர்வு நிகழ்வு.

Share

(மன்னார் நிருபர்)

உலக வாய் சுகாதார தினத்தையொட்டி வாயின் மகிழ்ச்சி,வாழ்வின் மகிழ்ச்சி எனும் கருப்பொருளில் மன்னார் பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை யின் வாய் சுகாதார பிரிவு ஏற்பாடு செய்த உலக வாய் சுகாதார தின விழிப்புணர்வு நிகழ்வு கடந்த 24ம் திகதி அன்று செவ்வாய்க்கிழமை (24) காலை மன்னார் பிராந்திய பொது சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையில் இடம் பெற்றது.

பிராந்திய பல் வைத்திய நிபுணர் வைத்தியர் ஏ.றொபேட் சில்வா தலைமையில் இடம்பெற்ற குறித்த விழிப்புணர்வு நிகழ்வில் பிரதம விருந்தினராக மன்னார் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆசாத் எம். ஹனிபா கலந்து கொண்டார்.

மேலும் விருந்தினர்களாக மன்னார் பொது சுகாதார வைத்திய அதிகாரி ரூபன் லெம்பேட்,மாவட்டத்தில் கடமையாற்றும் பல் வைத்திய நிபுணர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

இதன் போது வருகை தந்த மக்களுக்கு வாய் சுகாதாரம் தொடர்பாக தெளிவு படுத்தப்பட்டுள்ளதோடு,வாய் சுகாதாரம் இன்மையால் ஏற்படும் ஆபத்துக்கள் குறித்தும்,குறிப்பாக வாய் புற்றுநோய் ஏற்படுவதற்கான காரணம் அறிகுறிகள் குறித்தும் தெளிவுபடுத்தப்பட்டது.

அதனைத் தொடர்ந்து வாய் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதோடு,வாய் புற்று நோயில் இருந்து தம்மை பாதுகாத்து கொள்வது குறித்தும் தெளிவு படுத்தப் பட்ட மை குறிப்பிடத்தக்கது.

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>