எகிப்து நாட்டின் தலைநகர் கெய்ரோவில் உள்ள புகழ்பெற்ற சுற்றுலா தலங்களை சுற்றிப்பார்க்க நேற்று பேருந்தில் வெளிநாட்டினர் சென்றனர். அந்த பேருந்தில் 27 ரஷியர்கள் உள்பட 40க்கும் மேற்பட்டோர் பயணித்தனர். இந்நிலையில், ஹர்ஹடா – கெய்ரோ தேசிய நெடுஞ்சாலையில் ரஸ் ஹரிப் பகுதியில் சென்றுகொண்டிருந்தபோது சுற்றுலா பேருந்து மீது சாலையில் எதிரே வந்த லாரி மோதியது. இந்த கோர விபத்தில் பேருந்து விபத்தில் எகிப்தை சேர்ந்த பேருந்து ஓட்டுநர், ரஷிய சுற்றுலா பயணி என 2 பேர் உயிரிழந்தனர். மேலும், 39 பேர் படுகாயமடைந்தனர்.
தகவலறிந்து விரைந்து சென்ற காவல்துறை காயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும், இந்த விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167"
crossorigin="anonymous"></script>
<ins class="adsbygoogle"
style="display:block; text-align:center;"
data-ad-layout="in-article"
data-ad-format="fluid"
data-ad-client="ca-pub-2268409811114167"
data-ad-slot="7294005735"></ins>
<script>
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
</script>