எடப்பாடி பழனிசாமி இல்லத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

Share

கோவையில் உள்ள கடப்பிதழ் அலுவலகத்திற்கும் மின்அஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடப்பட்டது.

    சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள முன்னாள் தமிழக முதல்-அமைச்சர் மற்றும் சட்டசபை எதிர்க்கட்சி தலைவரான எடப்பாடி பழனிசாமி இல்லத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடப்பட்டு உள்ளது. எடப்பாடி பழனிசாமி இல்லத்தில் வைத்த வெடிகுண்டு விரைவில் வெடிக்கும் என மிரட்டல் விடப்பட்டு இருந்தது. இதனால், மோப்ப நாய் உதவியுடன் காவல்துறை சோதனை செய்து வருகின்றனர். இதேபோன்று, கோவையில் உள்ள கடப்பிதழ் அலுவலகத்திற்கு மின்அஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடப்பட்டது. கடப்பிதழ் அலுவலகத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டு உள்ளது என்றும் அது விரைவில் வெடிக்கும் என்றும் அதில் மிரட்டல் விடப்பட்டு இருந்தது. இதுபற்றி தகவல் அறிந்து, வெடிகுண்டு தடுப்பு பிரிவு காவல்துறை, மோப்ப நாயுடன் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். பண்டிகை நாளான இன்று ஒரே நாளில் அடுத்தடுத்து இதுபோன்று விடப்பட்ட வெடிகுண்டு மிரட்டலால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. 

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>