தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு – டில்லி என்பது நிரூபணம்! எதிர்க்கட்சியினர் டில்லியில் முகாமிட்டிருப்பது மக்கள் நலனுக்காகவா? தேர்தல் களத்தை எதிர்கொள்வதற்கான முடிவுகளைக்கூட டில்லியே எடுக்கும் நிலை. இனி, டில்லியின் முடிவே அவர்களது முடிவு! இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தனது மற்றொரு பதிவில், “ஒவ்வொரு நாளும் 9 மணி நேரத்திற்கும் மேலாக நேர்காணல் நடத்தி, ஆயிரக்கணக்கான உடன்பிறப்புகளைச் சந்திப்பதே எனது உற்சாகத்தை அதிகரித்துள்ளது. நமது திராவிட மாடல் ஆட்சியில் தங்கள் தொகுதி அடைந்திருக்கும் வளர்ச்சி பற்றியும், நம் சாதனைத் திட்டங்களுக்கு இருக்கும் வரவேற்பு பற்றியும் ஒவ்வொருவரும் மிகுந்த நம்பிக்கையுடன் விவரிக்கின்றனர். நேர்காணலுக்கு வரும் உடன்பிறப்புகள் மட்டுமல்ல, நீங்களும் உங்களின் கருத்துகளை முன்வையுங்கள்.. உங்கள் கருத்துகளில் இருந்து கிடைக்கும் திராவிட மாடல் 2.0-வுக்கு அடித்தளமாகட்டும்!” என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.