74 ஆண்டு கால தமிழக தேர்தல் வரலாற்றில், யாரும் எதிர்பாராத வகையிலான தேர்தல் முடிவை 17-வது சட்டசபை தேர்தல் தந்திருக்கிறது. தி.மு.க. தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலினே தோல்வியை சந்தித்து இருக்கிறார். த.வெ.க. முன்னிலை பெற்றுள்ள நிலையில், தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை அமைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில், 2-வது இடத்தை தி.மு.க. கூட்டணி பிடித்துள்ளது. எனவே, தி.மு.க.வில் இருந்தே எதிர்க்கட்சி தலைவர் தேர்வு செய்யப்பட வேண்டிய நிலை உள்ளது. சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதியில் வெற்றி பெற்றுள்ள மு.க.ஸ்டாலினின் மகன் உதயநிதி, எதிர்க்கட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட அதிகம் வாய்ப்புள்ளது. ஏற்கனவே, துணை முதல்-அமைச்சராக அவர் இருந்துள்ளார். எனவே, விஜயை எதிர்க்க உதயநிதியே சரியான ஆளாக இருப்பார் என்று தி.மு.க. தலைமை கருதுகிறது. என்றாலும், கட்சியின் தலைவரே தோல்வி அடைந்துள்ளார் என்பதை தி.மு.க. தலைமை வருத்தத்தில் இருக்கிறது. என்றாலும், மு.க.ஸ்டாலினுக்கு இன்னும் ஒரு வாய்ப்பு இருக்கிறது. அதாவது, திருச்சி கிழக்கு தொகுதியை விஜய் விட்டுக்கொடுக்கும் பட்சத்தில், அங்கு இடைத்தேர்தல் நடைபெறும். அதில் வேண்டுமானால் மு.க.ஸ்டாலின் மீண்டும் போட்டியிடலாம்.
எதிர்க்கட்சி தலைவராகிறார் உதயநிதி ஸ்டாலின்!
<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167"
crossorigin="anonymous"></script>
<ins class="adsbygoogle"
style="display:block; text-align:center;"
data-ad-layout="in-article"
data-ad-format="fluid"
data-ad-client="ca-pub-2268409811114167"
data-ad-slot="7294005735"></ins>
<script>
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
</script>