எத்தனை வழக்குகள் போட்டாலும் உண்மையை உரக்க பேசுவோமென அனிதா ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்

Share

திருச்செந்தூர் தொகுதி மக்களின் நலனுக்காக எத்தனை வழக்குகள் போட்டாலும் உண்மையை உரக்கப் பேசுவோமென அனிதா ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.  ருச்செந்தூரில் கடந்த 20 ஆம் தேதி நடைபெற்ற திமுக கட்சி கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் முதல் அமைச்சர் விஜய்யை கடுமையாக விமர்சித்தார். அனிதா ராதாகிருஷ்ணன் பேசுகையில், ”இன்னைக்கு தமிழகத்தினுடைய மக்கள் சொல்கிறார்கள் ஏன்டா ஓட்டு போட்டோம். சனியன்கள் மாதிரி வந்து உட்கார்ந்திருக்கிறார்கள்’ என்று நினைக்கிறார்கள். அள்ளி அள்ளி தந்தாரே நமக்கு, அந்த புண்ணியவானை அநியாயமாக தோற்கடித்து விட்டோமே என்கிறார்கள் என்னிடம் பத்திரிகையாளர்கள் கேட்கும் போது சொன்னேன் ‘இன்றைக்கு மு.க.ஸ்டாலினை தொகுதியில் அவரை தோற்கடித்தவர்கள் எதற்கும் தகுதி இல்லாதவர்களாக இருக்கிறார்கள்’ என்று சொன்னேன். உடனே ‘எப்படி பொதுமக்களை நீங்கள் தாக்கி பேசலாம்’ என்று கேட்டார்கள். நான் சொன்னேன் பெருந்தலைவர் காமராஜர் விருதுநகரில் தோற்கடிக்கப்பட்ட போது எங்க ஊருக்கு வர முடியாது. தோற்கடித்து விட்டு விருதுநகர்காரன் இங்கே எதுக்கு வருகிறார் என்று கேட்போம். அதேபோல் கன்னியாகுமரியில் அப்பச்சி தோற்கடித்து நீங்கள் ஏன் இங்கே வருகிறீர்கள் என்று ஓட ஓட விரட்டினோம்.  அதே உணர்வோடு தான் எங்களுடைய தமிழகத்தினுடைய முதலமைச்சராக இருந்த மு.க.ஸ்டாலின் ஒவ்வொரு தொகுதியாக அக்கு அக்காக பார்த்து ஒவ்வொரு மக்களுக்கும் நன்மை செய்த அந்த முதலமைச்சரை யார், எப்படி என்று பார்க்காமல் தோற்கடித்துள்ளீர்கள். என்னுடைய பெயர் ஜோசப் அனிதா ராதாகிருஷ்ணன் என்றால் எனக்கு ஓட்டு போட்டு இருப்பார்கள். என்னுடைய பெயர் வெறும் அனிதா ராதாகிருஷ்ணன் என்பதால் ஓட்டுப்போட வில்லை. விஜய் முட்டிப்போட்டு கொண்டு போனார் அவருக்கு ஓட்டுப் போடவா எனக்கு ஓட்டுப் போடவா என்று நினைத்தார்கள். இப்படி தெரிந்து இருந்தால் நாங்கள் தலைகீழாகக் கூட முட்டிப்போட்டு இருப்போமே. மீனவர்கள் சகோதர சகோதரிகள் நினைக்கும் போது எனக்கு ரொம்ப வேதனை உண்டு. என்னுடைய தொகுதியில் மீனவ சகோதரர்களை எல்லாம் உயிராக நேசித்தேன். உயிராக நேசித்ததோடு மட்டுமல்லாமல் அவர்களுக்கு இன்னல் வரும் பொழுது தோளோடு தோளாக நின்றேன். ஆனால் என்னை கவுத்து விட்டீர்களே” என்று பேசியிருந்தார். அனிதா ராதாகிருஷ்ணன் இந்த பேச்சு தொடர்பாக தவெகவினர் ஆத்தூர் காவல் நிலையத்தில் புகாரளித்தனர். இந்த புகாரின் அடிப்படையில், அனிதா ராதாகிருஷ்ணன் மீது மூன்று பிரிவுகளின் கீழ் காவல்துறை வழக்குப்பதிவு செய்தனர். இது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள அனிதா ராதாகிருஷ்ணன் கூறியிருப்பதாவது: தமிழ்நாட்டு மக்களின் உரிமைகளுக்காகவும், தமிழர்களின் சுயமரியாதைக்காகவும் அச்சமின்றி தொடர்ந்து இயங்கிவரும் திமுகவின் உண்மை தொண்டனை வழக்குகள் போட்டு அச்சுறுத்த இயலாது. கருணாநிதி, மு.க.ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் வழியில் மக்களின் உரிமைக்கும் வாழ்வியலுக்குமான எங்கள் போராட்டம் தொடரும். எழுத்துரிமை, பேச்சுரிமை, ஜனநாயக உரிமை என்ற அரசியல் சட்டத்தின் அடிப்படையை வழக்குகள் போட்டு தடுக்க இயலாது. திருச்செந்தூர் தொகுதி மக்களின் நலனுக்காக எங்கள் போராட்டம் என்றும் தொடர்வோம். உண்மையை உரக்கப் பேசுவோம். மக்கள் சக்தி வெல்வது நிச்சயம்” என்று கூறியுள்ளார். 

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>