எனது தலைமையில் ஆட்சி அமையும்: தனிக்கட்சி தொடங்க திட்டம்?- சசிகலா பரபரப்பு பேட்டி

Share

என்னை மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா நினைவிடத்தில் சசிகலா அஞ்சலி செலுத்தினார். அப்போது அவரது ஆதரவாளர்கள் துரோகிகளையும் எதிரிகளையும் வீழ்த்தி சசிகலா தலைமையில் ஆட்சி அமைப்போம் என்று உறுதிமொழி எடுத்தனர். இது தொடர்பாகவும் சட்டமன்றத் தேர்தலை தனிக்கட்சி தொடங்கி சந்திக்க போகிறீர்களா? என்பது பற்றி நிருபர்கள் அவரிடம் சரமாரியாக கேள்வி எழுப்பினார்கள். இதற்கு பதில் அளித்து அவர் கூறியதாவது: எதிரிகள் யார் துரோகிகள் யார் என்பது தமிழக மக்களுக்கு தெரியும். இது பற்றி நான் தெளிவாக சொல்ல வேண்டியதில்லை. வருகிற சட்டமன்றத்தேர்தலில் எனது தலைமையில் நிச்சயம் அம்மா ஆட்சியை அமைப்போம். அது எப்படி நடக்கும் என்பதை நீங்களே விரைவில் தெரிந்து கொள்வீர்கள் என்றார்.

இதனிடையே அ.தி.மு.க.வை ஊழல் கட்சி என்று நடிகர் விஜய் விமர்சித்துள்ளாரே என்பது பற்றிய கேள்விக்கு பதில் அளித்த சசிகலா, அ.தி.மு.க. ஆட்சி எப்படி இருந்தது என்று அனைவருக்கும் தெரியும். ஒவ்வொரு குடும்பத்தினரும் தமிழக மக்களும் அம்மாவின் ஆட்சி எப்படி இருந்தது என்று தெரிந்து வைத்திருக்கிறார்கள். எனவேதான் இப்போதும் அம்மா ஆட்சி மீண்டும் மலரும் என்று அனைவரும் சொல்லிக் கொண்டிருக்கிறோம் என்றார். தேசிய ஜனநாயக கூட்டணியில் டி.டி.வி. தினகரன் இணைந்திருப்பது பற்றிய கேள்விக்கு பதில் அளித்த சசிகலா, ஒவ்வொரு கட்சிக்கும் ஒவ்வொரு முடிவு இருக்கும். அதன் அடிப்படையில் அவர்கள் செயல்பட்டு இருப்பார்கள். அது பற்றி எல்லாம் எப்படி கருத்து தெரிவிக்க முடியும் என்றார்.

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>