எலிசெபெத்த மகாராணியின் 70வருட சேவை பூர்த்தியை முன்னிட்டு பதக்கம் மற்றும் அரசின் சான்றிதழ் ஆகியவற்றைப் பெற்ற நான்கு சேவையாளர்கள்

Share

கடந்த 24ம் திகதி செவ்வாய்க்கிழமையன்று மதியம் கனடாவின் மார்க்கம் நகரில் அமைந்திருக்கும் மார்க்கம் தோர்ன்ஹில் பாராளுமன்ற உறுப்பினரும் கனடாவின் மத்திய சிறு வர்த்தகம். ஏற்றுமதி அபிவிருத்தி மற்றும் சர்வதேச வர்த்தகம் ஆகிய துறைகள் சார்ந்த அமைச்சருமான கௌரவ மேரி இங் அவர்களின் அலுவலகத்தில்அமைச்சர்
சார்பாக கனடிய தமிழர் சமூகத்தைச் சேர்ந்த நான்கு சமூக சேவையாளர்கள் கௌரவிக்கப்பெற்றார்கள்.

மேற்படி கௌரவத்தைப் பெற்றவர்கள் கனடா வாழ் திருமதி ஞானம்மா திருநாவுக்கரசு (ஆன்மீக மற்றும் சமூக சேவையாளர்), பாஸ்டர் சோதி செல்லத்துரை, ( ஆன்மீக மற்றும் சமூக சேவையாளர்), திரு கேதா நடராஜா (வர்த்தகத் துறை மற்றும் சமூக சேவையாளர்), திரு வாசன் பரமேஸ் (வர்த்தகம், நிர்வாகம் மற்றும் சமூக சேவையாளர்),

இந்த கௌரவிப்பு நிகழ்வில் பிரித்தானியாவின் எலிசெபெத்த மகாராணியின் 70வருட சேவை பூர்த்தி விழாவையொட்டிய பதக்கம் மற்றும் அரசின் சான்றிதழ் ஆகியவை இந்த நான்கு சேவையாளர்களுக்கும் வழங்கப்பெற்றன.

இங்கே காணப்படும் படங்களில் கௌரவம் பெற்றவர்களின் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் ஆகியோரும் காணப்படுகின்றனர்.

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>