01-07-2024 அன்று ( முற்பகல் 11.30 மணியளவில் யாழிலுள்ள இந்திய துணைத் தூதரகம் முன்றலில் யாழ். மாவட்ட கடற்தொழில் அமைப்புக்கள் ஒன்றிணைந்து போராட்டத்தை முன்னெடுத்தன.
யாழ்ப்பாணம் மருதடிச் சந்தியில் ஆரம்பித்த குறித்த போராட்டமானது இந்திய துணைத் தூதரகம் முன்றலில் நிறைவுற்றது.
இதன்போது கடற்தொழில் அமைப்புகளால் இந்தியத் தூதருக்கு மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டது.
யாழ் மாவட்ட கிராமிய கடற்தொழில் அமைப்புகளின் சம்மேளனத் தலைவரான செல்லத்துரை நற்குணம் ,
யாழ் மாவட்ட கடற்தொழிலாளர் கூட்டுறவுச் சங்க சமாசங்களின் சம்மேளனத் தலைவரான சிறீ கந்தவேள் புனிதப் பிரகாஸ், ஆகியோர் இந்த ஒன்றிணைந்து போராட்டத்தை ஏற்பாடு செய்திருந்தனர்.
<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167"
crossorigin="anonymous"></script>
<ins class="adsbygoogle"
style="display:block; text-align:center;"
data-ad-layout="in-article"
data-ad-format="fluid"
data-ad-client="ca-pub-2268409811114167"
data-ad-slot="7294005735"></ins>
<script>
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
</script>