தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்துக்கு தமிழக வெற்றிக் கழகம் எதிர்ப்பு தெரிவித்து உள்ளது. வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை கண்டித்து தமிழகம் முழுவதும் த.வெ.க.வினர் இன்று ஆர்ப்பாட்டம் நடத்துகிறார்கள். இந்நிலையில், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை கண்டித்து தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய் காணொளி வெளியிட்டுள்ளார். அந்த காணொளியில் விஜய் கூறியதாவது: கொஞ்சம் ஏமாந்தா.. நம்ம எல்லோருக்கும் வாக்களிக்கும் உரிமை இல்லாமல் போகும். வாக்காளர்கள் அனைவருக்கும் ஒரே மாதத்தில் எஸ்ஐஆர் படிவம் எப்படி சென்று சேரும்? எஸ்ஐஆர் பணியால் அதிகம் பாதிக்கப்படப் போவது உழைக்கும் மக்கள், ஏழைகள், வேலைக்கு போகும் பெண்கள்தான். பாம் கொடுக்க வருவீர்கள் என்பதற்காக வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே உட்கார்ந்திருக்க வேண்டுமா? என்று தெரிவித்தார்.
எஸ்ஐஆர்ஐ ஏன் எதிர்க்கிறோம் – விஜய் விளக்கம்
<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167"
crossorigin="anonymous"></script>
<ins class="adsbygoogle"
style="display:block; text-align:center;"
data-ad-layout="in-article"
data-ad-format="fluid"
data-ad-client="ca-pub-2268409811114167"
data-ad-slot="7294005735"></ins>
<script>
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
</script>