ஏறாவூரில் இரு கூரிய வாள்களுடன் பெண் ஒருவர் கைது

Share

(கனகராசா சரவணன்)

ஏறாவூரில் பிரதேசத்தில் பெண் ஒருவரை இரண்டு கூரிய வாள்களுடன்; 09ம் திகதி ஞாயிற்றுக்கிழமை கைது செய்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

மாவட்ட புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த தகவல் ஒன்றிணை அடுத்து சம்பவ தினமான அன்று பொலிசார் ஏறாவூர் முதலாம் பிரிவிலுள்ள மையவாடி வீதி மீராகேன் பிரதேசத்திலுள்ள வீடு ஒன்றை சுற்றிவளைத்து முற்றுகையிட்டனர்.

இதன் போது அங்கு மறைத்து வைக்கப்பட்டிருந்த கூரிய இரு வாள்களை மீட்டதுடன் 41 வயதுடைய பெண் ஒருவரை கைது செய்தனர். இவரை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்

இதேவேளை குறித்த பெண்ணின் கணவர் ஏற்கனவே போதை பொருளுடன் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்ட விளக்கமறியில் சிறையில் அமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>