ஏ.ஆர்.காந்தி கிருஷ்ணா இயக்கிய திரைப்படம் “பிரேக் பாஸ்ட்”

Share

கிரிஷா வரதராஜ் தயாரிப்பில், ஏ.ஆர்.காந்தி கிருஷ்ணா இயக்கத்தில், ரானவ், ரோஸ்மின், சம்பத் குமார், கஸ்தூரி, அர்ச்சனா, கிருத்திக் மோகன், அமிதா ரங்கந்த், ரவி மரியா ஆகியோரின் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் “பிரேக் பாஸ்ட்”. காதலித்து திருமணம் செய்து கொண்ட ஒரு இளம் தம்பதியினர் கருத்து வேறுபாட்டால் விவாகரத்து பெற நீதிமன்றம் செல்கிறார்கள். நீதிபதி தீர்ப்பு வழங்குவதற்கு முன், ஒரு மனநல மருத்துவரிடம் ஆலோசணை பெற இவ்விருவரையும் அனுப்பி வைக்கிறார். அந்த மனநல மருத்துவரும், இவர்களுக்கு முன் தன்னிடம் ஆலோசனை பெற வந்த வேரொரு தம்பதியினரின் கதையை இந்த தம்பதியினரிடம் சொல்லி உண்மையான நிரந்தரமான வாழ்க்கை எது என்பதை இந்த தம்பதியினருக்கு உணர வைக்கிறார். இந்த மருத்துவரின் ஆலோசனையை கேட்டபிறகு இவர்கள் ஒன்றாக சேர்ந்து வாழ்ந்தார்களா? இல்லையா? இவர்களுக்கு முன் ஆலோசனை பெறவந்த தம்பதியினரும் ஒன்று சேர்ந்தார்களா? இல்லையா? என்பதுதான் இந்த படத்க்த்கின் கதை.  ராணவ், தனது முதல் படத்திலேயே மிகவும் அழுத்தமான மற்றும் சவாலான ஒரு கதாபாத்திரத்தில் ஒரு படித்த, நேர்மையான கிராமத்து இளைஞனாக விரக்தியையும், கௌரவத்தையும் மிகச் சரியாகப் பிரதிபலித்துள்ளார். ரோஸ்மின், பணக்காரப் பெண்களின் மனநிலையை எதார்த்தமாக பிரதிபலித்தது, காதலுக்காக எதையும் செய்யும் ஒரு துடிப்பான பெண்ணாகவும், பிறகு திருமண வாழ்க்கையில் ஏற்படும்  தானென்ற அகந்தை மோதல்களால் மன உளைச்சலுக்கு ஆளாகும் பெண்ணாகவும் தனது நடிப்பில் பல பரிமாணங்களைக் காட்டியுள்ளார். அமிதா ரங்கநாத், ஒரு நவீன பெண்ணின் மனப்போராட்டங்களை அழகாக வெளிப்படுத்தியுள்ளார். தனது கதாபாத்திரத்திற்கு தேவையான துடிப்பையும், அதே சமயம் திருமண உறவில் ஏற்படும் விரிசல்களால் உண்டாகும் மன காயங்களையும் நேர்த்தியாகக் கையாண்டுள்ளார். கௌரவம் பார்க்கும் பெரிய தொழிலதிபராகவும், மகளின் மீது அதீத அன்பு கொண்ட தந்தையாகவும் சம்பத் ராஜ் மிக அழுத்தமானதொரு நடிப்பை வழங்கியுள்ளார். வயதான தோற்றத்தில் மனநல ஆலோசகராக கஸ்தூரி, தேசிய விருது பெற்ற நடிகை அர்ச்சனா மற்றும் ரவி மரியா ஆகியோர் நேர்த்தியான பங்களிப்பை வழங்கியுள்ளனர். ஜி.வி. பிரகாஷ் குமார் இசையில்  இரு பாடல்கள் மனதில் ரீங்காரமிட வைக்கிறது. எம்.வி. பன்னீர் செல்வத்தின் ஒளிப்பதிவு கண்களுக்கு விந்தளிக்கிறது. இருவேறு தம்பதியினரின் கதையை ஒரே நேர்கோட்டில் பயணிக்க வைத்திருக்கும் படத்தொகுப்பாளர்கள் எஸ்.பாஸ்கர் மற்றும் சுஜித் ஆகிய இவ்விரு படத்தொகுப்பாளர்களும் பாராட்டைப் பெறுகிறார்கள். படத்தின் பெருபாலான காட்சிகள் எதார்த்தமாக இல்லாமல், செயற்கைத்தனம் மோலோங்கியுள்ளது. அர்ச்சனா பாராட்டும்படியான இயல்பான நடிப்பை தந்துள்ளார். மனநல மருத்துவராக நடித்திருக்கும் கஸ்தூரி யார்?  என்பதை உச்சக்கட்ட காட்சியில் இயக்குநர் காந்தி கிருஷ்ணா காட்டியிருப்பது யாரும் எதிர்பார்க்காத ஒன்று. இக்காட்சியில் இயக்குநருக்குரிய முத்திரையை பதித்துள்ளார் ஏ.ஆர்.காந்தி கிருஷ்ணா.

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>