ஐக்கிய தேசிய கட்சியின் பொது செயலாளர் மன்னார் விஜயம்

Share

மன்னார் நிருபர்

07.05.2023

ஐக்கிய தேசிய கட்சியின் பொது செயலாளர் பாலித ரங்கே பண்டார இன்றைய தினம் (07) ஞாயிற்றுக்கிழமை மன்னார் மாவட்டத்திற்கு விசேட விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பணிப்பின் பேரில் இம்முறை உள்ளூராட்சி மன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் மற்றும் விவசாய அமைப்பு, மீனவர் சங்கப் பிரதிநிதிகள், சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள், மகளிர் அமைப்புகளின் உறுப்பினர்கள், தொழிற்சங்கப் பிரதிநிதிகள் ஆகியோரை சந்தித்து கலந்துரையாடும் முகமாக குறித்த விஜயம் இடம் பெற்றது.

குறித்த நிகழ்வில் ஓய்வு நிலை ஜெனரல் றனுவ ராஜ கருண ,கிராமிய பொருளாதார இராஜாங்க அமைச்சின் இணைப்புச் செயலாளர் றஞ்சித் குணரெட்ண ,பாராளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தானின் மாவட்ட இணைப்பாளர் தர்சின், ஐக்கிய தேசிய கட்சியின் மாவட்ட இணைப்பாளர் பஸ்மி உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

குறித்த நிகழ்வில் ஐக்கிய தேசிய கட்சியின் மன்னார் மாவட்டத்திற்கான பொதுக்குழு தெரிவும் இடம் பெற்றது.

குறித்த நிகழ்வில் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் மற்றும் விவசாய அமைப்பு, மீனவர் சங்கப் பிரதிநிதிகள், சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள், மகளிர் அமைப்புகளின் உறுப்பினர்கள், தொழிற்சங்கப் பிரதிநிதிகள் அழைக்கப்பட்டிருந்த போதும் பலர் கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>