ஐரோப்பாவை வாட்டி வதைக்கும் வெப்ப அலையால் பள்ளிகள் மூடல்

Share

ஐரோப்பாவில் வாட்டி வதைக்கும் வெப்ப அலையால் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. ஐரோப்பிய நாடுகளில் முன்னெப்போதும் இல்லாத வகையில் கடுமையான வெப்ப அலை வீசி வருகிறது. பிரான்ஸ் நாட்டின் பல பகுதிகளில் வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸைத் தாண்டியுள்ளது. இதனால் நாட்டின் 3-ல் ஒரு பகுதிக்கு ‘சிவப்பு எச்சரிக்கை’ விடுக்கப்பட்டு, கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

வெப்பத்தின் தாக்கத்தால் மக்கள் எளிதில் நீர்ச்சத்துக் குறைபாட்டிற்கு ஆளாவதைத் தடுக்க, பொது இடங்களில் மது அருந்தப் பிரான்ஸ் அரசு அதிரடியாகத் தடை விதித்துள்ளது. மேலும், முன்னெச்சரிக்கையாக 845 பள்ளிகள் மூடப்பட்டுள்ளன.  பருவநிலை மாற்றமே இந்த அதீத வெப்பத்திற்குக் காரணம் என உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>