ஐரோப்பிய யூனியன் நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சர்களுடன் ஜெய்சங்கர் ஆலோசனை நடத்தினார். ஐநா சபையின் 81வது பொதுக்கூட்டம் அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள ஐநா தலைமையகத்தில் இன்று தொடங்கியது. இந்த பொதுக்கூட்டம் வரும் 28ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த ஐநா சபையின் பொதுக்கூட்டத்தில் உலகின் பல்வேறு நாடுகளை சேர்ந்த தலைவர்கள் பங்கேற்றுள்ளனர். இந்தியா சார்பில் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் இந்த பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டுள்ளார். இந்நிலையில், ஐநா சபை பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட ஜெய்சங்கர் முன்னதாக நியூயார்க்கில் ஐநா தலைமையகத்தில் ஐரோப்பிய நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சர்களை சந்தித்தார். இந்த சந்திப்பின்போது இந்தியா – ஐரோப்பிய நாடுகளின் உறவு, வர்த்தகம், சர்வதேச அரசியல் சூழ்நிலை, உக்ரைன் – ரஷியா போர், மத்திய கிழக்கில் நிலவி வரும் போர் உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்தினார்.
ஐரோப்பிய யூனியன் நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சர்களுடன் ஜெய்சங்கர் ஆலோசனை நடத்தினார்
<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167"
crossorigin="anonymous"></script>
<ins class="adsbygoogle"
style="display:block; text-align:center;"
data-ad-layout="in-article"
data-ad-format="fluid"
data-ad-client="ca-pub-2268409811114167"
data-ad-slot="7294005735"></ins>
<script>
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
</script>