“ஒன்றாரியோவில் உள்ள பல்லின ஊடகங்களின் பலத்தையும் அரசுகளுக்கான அவற்றின் தேவைகள் பற்றியும் கனடிய பிரதமருக்கு எடுத்துச் சொல்வேன்”

Share

பல்லின ஊடகங்களின் முக்கியஸ்த்தர்களுடன் நடத்திய வட்ட மேசை சந்திப்பில் ஒன்றாரியோ மாகாண எதிர்க்கட்சித் தலைவி Marit Stiles உறுதி

“ஒன்றாரியோ மாகாணத்திலும் மற்றும் பிற மாகாணங்களிலும் இயங்கிவரும் உள்ள பல்லின ஊடகங்கள் தற்போது மிகுந்த நிதி நெருக்கடிகளுக்கு உள்ளாகியுள்ளதை அரசியல்வாதிகளான நாம் நன்கு அறிவோம். அதேவேளை அவற்றின் பலம் பற்றியும் மேற்படி பல்லின ஊடகங்களினால் அரசாங்கத்திற்கும் அரசியல்வாதிகளுக்கும் மற்றும் வர்த்தகர்களுக்கும் வாசகர்களுக்கும் உள்ள பலன்கள் பற்றியும் நாம் அறிவோம். இவ்வாறான நிலையில் அண்மையில் எமது கனடியப் பிரதமர் சுவிற்சலாந்தில் உலக பொருளாதார மாநாட்டில் ஆற்றிய உரையை முக்கியத்துவம் கொடுத்து தங்கள் முன்பக்கத்தில் பல பல்லின ஊடகங்கள் பிரசுரித்தும் ஒளிபரப்புச் செய்தும் உள்ளதை நான் இன்று நேரடியாகக் காண்கின்றேன். அவ்ற்றுள் கனடா உதயன் வாரப் பத்திரிகையும் ஒன்று என்பதை காண்கின்றேன். எனவே எமது பல்லின பத்திரிகைகளின் பலத்தையும் அரசுகளுக்கான அவற்றின் தேவைகள் பற்றியும் கனடிய பிரதமருக்கு எடுத்துச்
சொல்வேன்”

இவ்வாறு 28 ம் திகதி புதன்கிழமையன்று மாலைர ஒன்றாரியோ மாகாணப் பாராளுமன்றமான ‘குயின்ஸ்பார்க்’ இல் உள்ள கருத்தரங்கு அறையில் அவர்ட நடத்திய பல்லின ஊடகங்களின் முக்கியஸ்த்தர்களுடனான வட்ட மேசை சந்திப்பில் ஒன்றாரியோ மாகாண எதிர்க்கட்சித் தலைவி Marit Stiles உறுதியளித்தார்.

மேற்படி ஊடகச் சந்திப்பில் எதிர்க்கட்சித் தலைவியும்

Davenport தொகுதியின் எம்பிபியும் ஆகிய கௌரவ Marit Stiles அவர்கள் தெரிவித்தார்.

அவருடன் Alex Gilmour – Pqarkdale-HighPark மற்றும் Tom Rakocevic- Humber River-Black Greek ஆகிய மாகாணப் பாராளுமன்ற உறுப்பினர்களும் கலந்து சிறப்பித்து பல்லின ஊடகங்களின் பிரதம ஆசிரியர்களையும் அதன் நிர்வாகிகளையும் பாராட்டி உங்கள் பணிகளை தொடருங்கள். உங்களுக்கு நாம் என்றும் ஆதரவாக இருப்போம். ” என்று உறுதியளித்தார்கள்

மேற்படி ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கனடா உதயன் பிரதம ஆசிரியர் மற்றும் ரிவிஷன் தமிழ் ஆங்கில இணையத்தளத்தின் சார்பில் ரவி அச்சுதன் மற்றும் ஷார்லினி பிள்ளை ஆகியோரும் கலந்து கொண்டனர்.

Uthayan LJI Journalist Arjune

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>