ஒய்.ஜி.மகேந்திரன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள படம், ‘சாருகேசி’. இதில் சத்யராஜ், சமுத்திரக்கனி, சுஹாசினி மணிரத்னம், தலைவாசல் விஜய், ரம்யா பாண்டியன், ராஜ் ஐயப்பன், மதுவந்தி மற்றும் பலர் நடித்துள்ளனர். அருண்.ஆர் தயாரித்துள்ள இந்தப் படத்தை, சுரேஷ் கிருஷ்ணா திரைக்கதை எழுதி இயக்கி உள்ளார். தேவா இசையமைத்துள்ள இப்படத்திற்கு பாடல்கள், வசனங்களை பா. விஜய் மேற்கொண்டுள்ளார். ஒரு புகழ்பெற்ற கர்நாடக இசைக் கலைஞரான ஒய்.ஜி.மகேந்திரன் மகனின் பழக்க வழக்கங்களும், அவரது திருமண வாழ்க்கையில் ஏற்படும் பிரச்சனைகளை மையமாக கொண்டு இப்படம் எடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், ‘சாருகேசி’ படத்தின் இசை மற்றும் முன்னோட்டத்தை நடிகர் ரஜினிகாந்த் வெளியிட்டார். இப்படம் ஜூன் மாதம் 12-ந்தேதி வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167"
crossorigin="anonymous"></script>
<ins class="adsbygoogle"
style="display:block; text-align:center;"
data-ad-layout="in-article"
data-ad-format="fluid"
data-ad-client="ca-pub-2268409811114167"
data-ad-slot="7294005735"></ins>
<script>
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
</script>