ஒராண்டு நினைவஞ்சலி | திருமதி. மனோன்மணி கனகராஜா (குஞ்சு) 

Share

(கரம்பன் கிழக்கு ஊர்காவற்றுறை) 

யாழ்ப்பாணம், கரம்பன் கிழக்கு ஊர்காவற்றுறையைப் பிறப்பிடமாகக் கொண்டவரும், கனடா வோன். ரொறன்ரோ கனடாவில் வசித்துவந்தவருமான திருமதி. மனோன்மணி கனகராஜா அவர்களின் ஓராண்டு நினைவஞ்சலி.

ஓராண்டு கழிந்தாலும்
உன் முகம் தெரியுதம்மா!
உன் புன்னகையைப்போல்
இம் மாதம் நம் வீட்டில்
உன் பூக்கள் புன்னகை செய்யும் அம்மா!
அம்மா, அப்பா என்று
இரு குரல் ஒலித்த வீட்டில்
இன்று ஒரு குரல் இல்லை அம்மா…
மண்ணை விட்டுப் போனாலும்
எம் மனதை விட்டுப் போகவில்லை அம்மா…
எங்களுக்கு ஆறதல் சொல்கின்றாய். அறிவு சொல்லுகின்றாய்!
அப்பாபிள்ளை, அப்பா பிள்ளை என்பீர்கள்
இன்று எம்மை விட்டு உன் அப்பாவிடம் சென்று விட்டாயே அம்மா

என்றும் உங்கள் ஆத்மா சாந்தியடைய
எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்திக்கின்றோம்
என்றும் உங்கள் நினைவுடன் வாழும்
அன்புக் கணவர் ராஜா, அன்பு மகள் ரொசானி,
சகோதர, சகோதரிகள், உற்றார், உறவினர்

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>