ஓமன் அருகே சென்ற கச்சா எண்ணெய் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டது

Share

ஓமன் அருகே சென்ற கச்சா எண்ணெய் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டது. ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் இணைந்து கடந்த பிப்ரவரி 28ம் தேதி தாக்குதல் நடத்தின. இந்த தாக்குதலை தொடர்ந்து இஸ்ரேல், அரபு நாடுகள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது. மேலும், ஹர்முஸ் ஜலசந்தியை மூடுவதாக ஈரான் அறிவித்தது. அதேவேளை, அனுமதியின்றி ஹர்முஸ் ஜலசந்தியை கடப்பதாக சரக்கு, கச்சா எண்ணெய் கப்பல்கள் மீது ஈரான் அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த தாக்குதல்களில் கப்பல்களில் பயணிக்கும் மாலுமிகள் பலர் உயிரிழந்துள்ளனர்.

அதேபோல், ஏமனில் செயல்பட்டு வரும் ஈரான் ஆதரவு பெற்ற ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஏடன் வளைகுடா பகுதியில் செங்கடலில் செல்லும் சரக்கு, கச்சா எண்ணெய் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், ஓமன் அருகே அரபிக்கடலில் சென்ற கச்சா எண்ணெய் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டது. ஓமனின் அஷ் ஷிஷான் நகரில் இருந்து 9 நாட்டிகல் மைல் தொலைவில் ஹர்மூஸ் ஜலசந்தி அருகே அதிகாலை கச்சா எண்ணெய் ஏற்றிக்கொண்டு கப்பல் சென்றுகொண்டிருந்தது. அந்த கப்பலை குறிவைத்து ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலில் கப்பலின் எஞ்சின் அறை முழுவதும் சேதமடைந்துள்ளது. இதையடுத்து, கப்பலில் இருந்த மாலுமிகள் ஒமன் கடற்படையால் பத்திரமாக மீட்கப்பட்டததாக தகவல் வெளியாகியுள்ளது. 

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>