கடாரம் கொண்டான்’ ராஜேந்திர சோழனின் 1000வது வெற்றிக் கொண்டாட்டம் கம்போடியா அங்கோர்வாட் நகரில் 22ம் திகதி கோலாகலமாக ஆரம்பமாகியது

Share

(கம்போடியா தேசத்தின் அங்கோர்வாட் நகரிலிருந்து லோகன் லோகேந்திரலிங்கம்)

அங்கோர் தமிழ்ச் சங்கம் மற்றும் சீனு ஞானம் ட்ராவல்ஸ் நிறுவனம் மற்றும் சவுத் ஈஸ்ட் ஆசியா பல்கலைக் கழகம் ஆகிவற்றின் இணைந்த ஏற்பாட்டிலும் சிந்தனையிலும் திட்டமிடப்பெற்ற ‘கடாரம் கொண்டான்’ ராஜேந்திர சோழன் பெருவீரனின் 1000வது வெற்றிக் கொண்டாட்டம் கம்போடியா தேசத்தின் அங்கோர்வாட் நகரில் 22-11-2025 அன்று திகதி சனிக்கிழமை காலை
கோலாகலமாக ஆரம்பமாகியது

மேற்படி இரண்டுநாள் கொண்டாட்டத்தின் முதல்நாள் அங்குரார்ப்பண நிகழ்வில் பார்வையாளனர்களும் அறிஞர்களும் தமிழக அரசியல் தலைவர்களும் ஊடகவியலாளர்களும் கலைஇலக்கியவாதிகளும சமூக செயற்பாட்டாளர்களும உள்ளடங்கிய சுமார் 400 பேர் கலந்து சிறப்பித்தார்கள்.

இந்த மாநாட்டை இங்கு சிறப்பாக நடத்துவதற்கு அங்கோர் தமிழ்ச் சங்கத்தை நிறுவிய தங்கவேலு சிறினிவாச ராவ்-ராஜசேகரன் ஞானசேகர் மற்றும தாமரை சிறினிவாச ராவ் ஆகியோர் முக்கிய பங்கு வகித்தார்கள். அவர்களோடு மாணிக்கம் சதாசிவம் மற்றும் முருகேசன் ஞானமூர்த்தி ஆகிய இருவரும் இணைப்பாளர்களாக இருந்து செயற்பட்டாளர்கள்.

மேற்படிஇரண்டு நாட் கொண்டாட்டத்திற்கு தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர்கள் க. சோ. கண்ணன் மற்றும் கொங்கு ஈஸ்வரன் ஆகியோர் கலந்து கொண்டு பயனுள்ள உரைகளை ஆற்றினார்கள்.

அவர்களோடு மலேசியத் திருநாட்டின் முன்னாள் சுகாதார அமைச்சர் சுப்பிரமணியம் அவர்கள் மற்றும் அகழவாய்வாளர் பெரியார் வேதநாயகம் ஆகியோரும் கலந்து கொண்டு கடாரம் கொண்டான் ராஜேந்திர சோழன் பெருவீரனின் பெருமைகளை எடுத்துரைத்தார்கள்.
கம்போடிய தேசத்தின் மரபு சார்ந்த நாட்டியம் மற்றும் பரத நாட்டியம் ஆகியவையும் சபையோரால் பாராட்டப்பெற்றன.

23ம் திகதி ஞாயிற்றுக்கிழமை இரண்டாம் நாள் நிகழ்ச்சிகள் இடம்பெறவுள்ளன.

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>