கத்தாரில் ஹெலிகாப்டர் விபத்து – 6 பேர் மரணம்

Share

கத்தார் நாட்டில் இருந்து வழக்கம்போல் ராணுவ ஹெலிகாப்டர் ஒன்று பணிக்காக புறப்பட்டது. அதில் மொத்தம் 7 பேர் பயணம் செய்தனர். இந்நிலையில், அது கடல்வழியே பறந்து செல்லும்போது திடீரென விபத்து ஏற்பட்டது. இதனால், ஹெலிகாப்டர் நீருக்குள் விழுந்தது. இதில், ஹெலிகாப்டரில் பயணம் செய்தவர்கள் நீரில் மூழ்க தொடங்கினர். இந்த விபத்தில் 6 பேர் பலியாகி உள்ளனர். ஒருவர் காணாமல் போயுள்ளார். இதனை அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கை உறுதிப்படுத்தி உள்ளது. தொழில்நுட்ப கோளாறே இந்த விபத்துக்கான காரணம் என்றும் அது தெரிவிக்கின்றது. காணாமல் போன நபரை தேடும் பணியும் நடந்து வருகிறது.

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>