ரொறன்ரொ மற்றும் மொன்றியால் மாநகரங்களில் உள்ள சிவாச்சாரியப் பெருமக்கள் பத்துக்கும் அதிகமானோர் கலந்து கொண்டு நடத்திய ‘இலட்ச்சார்ச்சனை ஆவர்த்தி’ அபிசேகங்கள் கனடாவின் ஒன்றாரியோ மாகாணத்தில் உள்ள கோண்வோல் சிவன் ஆலயத்தில் கனடா தினமன்று நடைபெற்றன. ஏராளமான அடியவர்கள் கலந்து சிறப்பித்த இந்த விசேட அபிசேகங்களில் பல பக்தர்கள் கலந்து சிறப்பித்து பெருமானின் அருள் பெற்றனர்.
அன்றைய தினம் ஆலயத்தின் அறங்காவல் சபைத் தலைவர் சிவரூபன் அவர்கள் உட்பட அங்கத்தவர்கள் மற்றும் தொண்டர்கள் என பலரும் மிகுந்த பக்தியோடு அனைத்து பூசை மற்றும் அபிசேகங்களில் பங்கெடுத்தனர்..
மேற்படி ஆலயம் 1730 VINCENT MASSEY DRIVE -CORNWALL K6H 5R6 என்னும் விலாசத்தில் அமைந்துள்ளது. ரொறன்ரோவிலிருந்து செல்கையில் 401 நெடுஞ்சாலைக்கு மிக அருகிலேயே ஆலயம் உள்ளது..
இங்கு எதிர்வரும் யூலை 15ம் திகதி தொடக்கம் யூலை 26ம் திகதிவரை வருடாந்த மஹோற்சவம் நடைபெறவுள்ளது. யூலை 23ம் திகதி தேர்த்திருவிழா நடைபெறவுள்ளது. ஆலயத்தின் தொலைபேசி இலக்கம்’ 416 564 9642
இங்கே உள்ள படங்கள் அன்றைய தினம் எடுக்கப்பெற்றவையாகும்.
படங்கள்: சத்தியன்