கனடாவிலிருந்து யாழ்ப்பாணம் சென்றவர்கள் பயணித்த கார் விபத்துக்குள்ளானது!

Share

பு.கஜிந்தன்

17ம் திகதி திங்கட்கிழமையன்று யாழ்ப்பாணம் – நாவற்குழி மாதா கோவிலடியில் ஒரு கோர விபத்து இடம்பெற்றுள்ளது.

கட்டுப்பாட்டை இழந்த கார், வீதியோரத்தில் உள்ள மாதா கோவிலின் மதலுடன் மோதி இந்த விபத்து சம்பவித்துள்ளது.

இருப்பினும் இந்த விபத்தின்போது வாகனத்தில் பயணம் செய்த மூவருக்கும் எந்தவிதமான காயங்களும் ஏற்படவில்லை.

கனடாவிலிருந்து சென்றிருந்த குடும்பம் ஒன்றின் பெண் ஒருவர், அவரது கணவர் மற்றும் 5வயது மதிக்கத்தக்க பெண் குழந்தை ஆகியோர் பயணித்த காரே இவ்வாறு விபத்தில் சிக்கியது. சாரதிக்கு போதிய நித்திரை இன்மையே விபத்துக்கான காரணம் என அறியமுடிகிறது.

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>