கனடாவிலிருந்து வெளிவரும் ‘இலக்கியவெளி’ சஞ்சிகையின் மொழிபெயர்ப்புச் சிறப்பிதழின் வெளியீட்டு விழா சிறப்புற நடைபெற்றது

Share

எழுத்தாளர் அகில் அவர்களை ஆசிரியராகக் கொண்டு கனடாவிலிருந்து வெளிவரும் ‘இலக்கியவெளி’ சஞ்சிகையின் மொழிபெயர்ப்புச் சிறப்பிதழின் வெளியீட்டு விழா கடந்த வாரம் ஸ்காபுறோவில் அமைந்துள்ள ஒன்றாரியோ தமிழிசைக் கலாமன்ற மண்டபத்தில் சிறப்புற நடைபெற்றது. விழாவிற்கு கலாநிதி நா. சுப்பிரமணியன் ஐயா அவர்கள் தலைமை தாங்கினார்கள். எழுத்தாளரும் ஆசிரியருமான தங்கராஜா சிவபாலு அவர்கள் நிகழ்ச்சித் தொகுப்பாளராக நேர்த்தியாகச் செய்தார்.

சிறுகதைகள். கவிதைகள். கட்டுரைகள் என பல படைப்புக்கள் வெவ்வேறு மொழிகளிலிருந்து தமிழுக்கு மொழிபெயர்ப்பு செய்யப்பெற்று அந்த சிறப்பிதழில் அடக்கப்பெற்றிருந்தன. வாழ்த்துரைகள் மற்றும் சிறப்புரைகள் வெளியீட்டுரை என பல ஆக்கபூர்வமான உரைகளை அழைக்கப்பெற்ற பேச்சாளர்கள் ஆற்றி. விழாவை அழகுற நகர்த்திச் சென்றார்கள்.

நூற்றுக்கணக்கான பார்வையாளர் விழாவில் கலந்து கொண்டு சஞ்சிகையின் பிரதிகளைப் பெற்றுச் சென்றார்கள்.

இங்கு காணப்படும் படங்கள் அங்கு எடுக்கப்பெற்றவையாகும்.

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>