கனடாவில் பிரமாண்டமான இசை நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்யும் நிறுவனமான ‘LATIKA PRODUCTIONS. வழங்கும் அற்புதமான ‘SUPER SINGER-Live in Toronto’ இசை நிகழ்ச்சி எதிர்வரும் சனிக்கிழமை 27-06-2026 அன்று மாலை 6.00 மணிக்கு 300 Water Street. Whitby என்னும் விலாசத்தில் அமைந்துள்ள CANADA EVENT CENTRE என்னும் அழகிய மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
இசை நிகழ்ச்சிக்கான அனுமதிச் சீட்டுக்களை eventbrite.ca என்னும் இணையத்தளத்திலும் அல்லது
647 996 5922 – 647 549 0059 ஆகிய இலக்கங்களை அழைத்தும் அல்லது மண்டப வாசலிலும் பெற்றுக்கொள்ளலாம்.
மேற்படி ‘SUPER SINGER-Live in Toronto’ விஜய் தொலைக்காட்சியின் பாடல் போட்டி நிகழ்ச்சியான ‘SUPER SINGER’ இல் அண்மையில் வெற்றி பெற்றவர்களான நிக்கில், தவசீலி, மெக்னா, மீனாட்சி, கனடா வாழ் பாடக பாடகிகளான நிதர்ஷா. பிரியந்தி, மற்றும் அஜீஷ் ஆகியோரும் இணைந்து இனிய பாடல்களைத் தரவுள்ளார்கள். தமிழ்நாடு சென்னையிலிருந்து மேற்படி பாடக பாடகிகள் அனைவரும் 24-06-2026 அன்று மாலை கனடா வந்து சேர்ந்துள்ளனர்.
மேற்படி பாடக பாடகிகள் பத்திரிகை ஆசிரியர்களோடும் புகைப்படப்பிடிப்பாளர்களோடும் சந்திக்கும் ஊடகச் சந்திப்பு 25-06-2026 வியாழக்கிழமை அன்று மாலை 7.00 மணிக்கு 833 Passmore Ave. Scarborough என்னும் விலாசத்தில் அமைந்துள்ள ROYAL CASA EVENT CENTRE மண்டபத்தில் நடைபெறவுள்ள