கனடாவில் இயங்கும் ‘கல்முனை பிராந்திய இணையம் ‘அமைப்பினர் அம்பாறை மாவட்ட கோமாரி கிராமத்தில் முன்னெடுத்த மனித நேயப் பணி!.

Share

கிழக்கு மாகாண, அம்பாறை மாவட்டம் பொத்துவில் கோமாரி பகுதியை சேர்ந்த கிராம அவிருத்தி சங்கத்தினர்கனடாவில் இயங்கும் ‘ கல்முனை பிராந்திய சேவை அமைப்பினருக்கு’ விடுத்த வேண்டுகோளின் பேரில் கோமாரி கழுகொல்ல கிராமத்தில் வாழ்கின்ற வறுமைக் கோட்டுக்கு கீழ் வாழும் வசதிகள் அற்ற முதியோர்களுக்கான (பெண்கள்) தைப்பொங்கலை முன்னிட்டு சிறப்பு பணி ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

கல்முனை பிராந்திய இணையம் கனடா அமைப்பினர் கனடாவில் ஒன்று கூடி அவர்கள் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு அமைய அமைப்பின் பிரதான இணைப்பாளர் விஜயரெட்னம் நொனிசப்பு, மற்றும் அமைப்பின் தலைவரான விசு கணபதிப்பிள்ளை அவர்கள். செயலாளர் பத்மநாதன் வேலுப்பிள்ளை, பொருளாளர் கோபி கிருஷ்ணன் குமார சூரியன், ஆகியோரின் சிறந்த ஆலோசனைக்கு அமைய கோமாரி கிராமத்திலே உள்ள சில முதிய பெண்களுக்கு தைப்பொங்கல் தினத்தினை அவர்களும் எல்லா மக்களும் போன்று கொண்டாட வேண்டும் என்ற நோக்கம் கருதி அவர்களுக்கான புதிய ஆடைகளும், பொங்கல் செய்வதற்கான சகல உபகரணங்களும் உள்ளிட்டு பொருட்கள் உட்பட சில உலர் உணவு பொருட்களும் வழங்கப்பட்டன.

14/01/2026 திகதி நடைபெற்ற இந்நிகழ்வில் தாயகத்தில் இப்பணியை சிறப்பாக முன்னெடுப்பதற்கு முன் நின்று செய்யப்பட்ட திரு என். சௌவிய தாசன் மற்றும் ஓய்வு பெற்ற உதவி கல்வி பணிப்பாளரும், ஊடகவியலாளருமான விபுலமணி வீ.ரி. சகாதேவ ராஜா மற்றும் சிறுவர் விரிவு உதவி கல்வி பணிப்பாளர் சார்ந்த குமார் ஆகியோர் கலந்து கொண்டு முதியோர்களுக்கான இந்த பொருட்களை வழங்கி வைத்தனர்

. ‘கல்முனை பிராந்திய இணையம்’ கனடா அமைப்பினர் அண்மையில் ஏற்பட்ட வெள்ள அனர்த்த நிலமையினால் பாதிக்கப்பட்ட மலையக பகுதி மக்களுக்கும் பல லட்சம் பெறுமதியான நிவாரண உதவிகளை வழங்கியமை இங்கு குறிப்பிடத்தக்கது.

இங்கு காணப்பெறும் படங்கள் அங்கு எடுக்கப்பெற்றவையாகும்.

(UTHAYAN LJI Journalist Ganesh)

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>