கனடாவின் LUCKY EXCLUSIVE FOUNDATIONS என்னும் இலாப நோக்கற்ற அமைப்பு கடந்த வார இறுதியில் 13-06-2026 அன்று நடத்திய INTRERNATIONAL CHILDREN’S EXPO என்னும் வணிக மற்றும் கலாச்சார விழா பிக்கரிங் நகரத்தில் உள்ள Chestnut Hill Development Recreation Complex -Pickering அரங்கில் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பெற்று நடைபெற்றது.
அரங்கத்தின் அழகிய மேடை. அதில் கலாச்சார மற்றும் பண்பாட்டு நடனங்கள் மற்றும் பாடல் நிகழ்ச்சிகள் அத்துடன் பயனுள்ள உரைகள். அரசியல் தலைவர்களின் ஆதரவான கருத்துக்கள் மற்றும் விளம்பரங்களின் காட்சிப் படுத்தல் ஆகியவை நிறைவான முறையில் அந்த மேடை நன்கு பயன்படுத்தப்பெற்றால் என்றால் அது மிகையாகாது.
ஏனைய பகுதிகளில் பல தமிழர் வர்த்தக நிறுவனங்கள் மற்றும் பல்லின கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் வகையில் ஆடை ஆபரணங்கள் மற்றும் கலாச்சார உடைகள் விற்பனை செய்யும் காட்சிக் கூடங்கள் திறந்திருந்தன.
மொத்தத்தில் எமது மாகாண பாராளுமன்ற உறுப்பினர் லோகன் கணபதி தனது வாழ்த்துரையில் குறிப்பிட்டது போன்று இருபதிற்கும் மேற்பட்ட பெண்மணிகள் இணைந்து இந்த அற்புதமான கொண்டாட்டத்தை ஒரு ‘மக்கள் விரும்பும் விழா’வாக நடத்தினார்கள் என்றால் அது மிகையாகாது.
திரு திருமதி ரவி அச்சுதன் தம்பதி மற்றும் அவர்களது இரண்டு பிள்ளைச் செல்வங்கள் இணைந்து அனைத்து ஏற்பாடுகளையும் கவனித்திருந்தார்கள் . அனைத்து நிகழ்ச்சிகளும் சிறப்பாக நகர்த்தப்பெற்றன