கனடாவில் படிமுறைத்தமிழ் விழாவில் வீரகேசரி முன்னாள் பொறுப்பாசிரியர் வடிவேல் தேவராஜ் அவர்களுக்கு ‘ஊடகப்பேரொளி’ பட்டம் வழங்கப்பெற்றது

Share

கனடா படிமுறைத்தமிழ் பெருவிழா கடந்த மே 31 ஆம் திகதி ஸ்காபுறோ நகரிஇல் நடைபெற்றது. இவ் விழாவில் சில துறைகளில் சேவையாற்றிவரும் அன்பர்கள் சிலர் விருதுகள் வழங்கிக் கௌரவிக்கப்பெற்றார்கள்.

அவர்களில் ஒருவராக வீரகேசரி முன்னாள் பிரதம பொறுப்பாசிரியரும் தற்போது கனடாவில் வாழ்ந்து வருபவருமான வடிவேல் தேவராஜ் அவர்கள் ஊடகத்துறை மற்றும் ஆய்வு ஆகிய துறைசார்ந்த அவரது பங்களிப்புக்கென ‘ஊடகப்பேரொளி’ என பட்டம் வழங்கி கௌரவிக்கப்பெற்றார்.

மேற்படி கௌரவத்தைஅவருக்கு வழங்கிய எழுத்தாளரும் கவிஞருமான கே. என். நவரட்னம் (க. நவம்) மற்றும் படிமுறைத்தமிழ் கல்வித்திட்டத்தின் நிறுவுனர் சித்தம் அழகியான் இராசரத்தினம் ஆகியோர் இங்கு காணப்படுகின்றார்கள்.

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>