கனடாவில் ‘பைரவி நுண்கலைக் கூடம்’ ‘ஆரோசை’ இசைக்குழு இணைந்து நடத்திய ‘தமிழிசை விழாவில் ‘தமிழ்ச் சமூக மையம்’ நிதிக்காக 50.000 டாலர்கள் வழங்கப்பெற்றன

Share

கனடாவில் ‘பைரவி நுண்கலைக் கூடம்’ மற்றும் ‘ஆரோசை’ இசைக்குழு இணைந்து ஜனவரி மாதத்தின் இறுதிநாளான 31ம் திகதி ‘பைரவி நுண்கலைக் கூடம்’ கலாச்சார மண்டபத்தில் நடத்திய ‘தமிழிசை விழாவில் தமிழிசை மற்றும் பன்னிரு திருமுறைகள் ஆகியவை மேற்படி இரு இசைசார்ந்த நிறுவனங்களின் மாணவ மாணவிகளால் இசைச் சமர்ப்பணமாக நிகழ்த்தப்பெற்றன.

அத்துடன் அன்றைய முக்கிய நிகழ்வாக தற்போது கனடிய தமிழர்கள் மத்தியில் பேசு பொருளாக விளங்கும் ‘தமிழ்ச் சமூக மையம்’ கட்டட நிதிக்காக 50.000 டாலர்கள் நான்கு தமிழர் நிறுவனங்களால் வழங்கப்பெற்றன. இந்த அற்புதமான நிகழ்வை ‘பைரவி நுண்கலைக் கூடத்தின் அதிபர் ஜெயச்சந்திரன் தியாகராஜா தொகுத்து வழங்கினார்.

மேற்படி நிதி அன்பளிப்பிற்கான மாதிரிக் காசோலைகளை தமிழச் சமூக மையத்தின் நிதி சேகரிப்புக் குழுவின் சார்பில் தொழிலதிபர் சாந்தா பஞ்சலிங்கம் அவர்கள் பெற்றுக்கொண்டார். அப்போது மேடையில் ரொறன்ரோ நகரசபை உறுப்பினர் நீதன் சண்முராஜா மற்றும் ‘கனடா உதயன்’ லோகேந்திரலிங்கம் ஆகியோர் இந்த அ ரிய பணியை வாழ்த்தி உரையாற்றினார்கள்.

மேற்படி நிகழ்வில் ‘பைரவி நுண்கலைக் கூடம்’ இசைக் கல்லூரியின் சார்பில் பத்தாயிரம் டாலர்களும் ‘ஆரோசை’ இசைக்குழுவின் சார்பில் இருபதாயிரம் டாலர்களும், சட்ட ஆலோசனை நிறுவனத்தின் சார்பில் பத்தாயிரம் டாலர்களும் திரு சத்தியசீலன் அவர்கள் குடும்பத்தின் சார்பில் பத்தாயிரம் டாலர்களுவழங்கப்பெற்றன என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

இந்த நிதி சேகரிப்பிற்கு பைரவி நுண்கலைக் கூடம்’ மற்றும் ‘ஆரோசை’ இசைக்குழு சார்ந்த பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் பக்கபலமாக விளங்கினார்கள் என்றால் அது மிகையாகாது.

செய்தி: சத்தியன்

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>