கனடாவைத் தலைமையகமாகக் கொண்ட ‘உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் செயலாளர் நாயகம் ஜேர்மனி வாழ் துரை கணேசலிங்கம் தாயகம் சென்றுள்ளார்.

Share

எமது யாழ் மண்ணில் 1974ம் நிறுவப்பெற்ற பின்னர் 50 ஆண்டுகளைக் கடந்தும் தொடர்ச்சியாக இயங்கிவரும் தமிழ்ப் பண்பாட்டு அமைப்பு என்ற நற்பெயர் பெற்றதும், தற்போது கனடாவைத் தலைமையகமாகக் கொண்டு இயங்கிவருவதுமான ‘உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் அகிலச் செயலாளர் நாயகம் ஜேர்மனி வாழ் துரை கணேசலிங்கம் சில நாட்களுக்கு முன்னர் தாயகம் சென்றுள்ளார்.

அவருக்கு கொழும்பு விமான நிலையத்தில் உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் இலங்கைக் கிளையின் முக்கிய உறுப்பினர்களால் சிறப்பு வரவேற்பு அளிக்கப்பெற்றது.

செயலாளர் நாயகம் துரை கணேசலிங்கம் அவர்கள் இலங்கையில் தங்கியிருக்கும் காலப்பகுயில் இவ்வருடத்தின் ஆகஸ்ட் மாதத்தில் இங்கிலாந்தில் நடைபெறவுள்ள உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கத்தின் 50வது ஆண்டு பெருவிழாவையும் மாநாட்டையும் நடத்துவதற்கு இலங்கையிலிருந்து பெற்றுக்கொள்ளக்கூடிய ஆதரவு மற்றும் ஒத்துழைப்பு தொடர்பாகவும் பல அமைப்புக்களுடன் கலந்துரையாடவுள்ளார்.

இங்கே காணப்படும் படங்களில் உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் இலங்கைக் கிளையின் முக்கிய உறுப்பினர்களான தலைவர் சத்தியானந்தன்- செயலாளர் எம். பிரசாந்தன் மற்றும் தேசிய அமைப்பாளர் தே. செந்தில் வேலவர் ஆகியோர் செயலாளர் நாயகம் துரை கணேசலிங்கம் அவர்களை வரவேற்பதைக் காணலாம்.

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>