கனடா ஒன்ராறியோ மாகாணத்தின் செயற்கை நுண்ணறிவு வளர்ச்சிக்கு 30 மில்லியன் டொலரை அரசாங்கம் முதலீடு செய்கிறது!

Share

மாகாண செயற்கை நுண்ணறிவுப் பயன்பாட்டு இணை அமைச்சர் விஜய் தணிகாசலமும், ஒன்றாரியோவின் பொருளாதார மேம்பாடு, வேலைவாய்ப்பு உருவாக்க மற்றும் வர்த்தக அமைச்சருமான விக் ஃபெடெலியும் இந்த அறிவிப்பை வெளியிட்டனர்.

ஒன்ராறியோவின் தொழில்துறைகளில் செயற்கை நுண்ணறிவின் பொறுப்பான பயன்பாட்டை விரிவுபடுத்தவும், எதிர்கால வேலைவாய்ப்புகளை உருவாக்கவும், வெக்டர் எனப்படும் தனியார் நிறுவனத்திற்கு 30 மில்லியன் டொலர் முதலீட்டை மாநில அரசு அறிவித்துள்ளது.

செயற்கை நுண்ணறிவுப் பயன்பாட்டுக்கான இணை அமைச்சர் விஜய் தணிகாசலம் அவர்களும், ஒன்ராறியோ அமைச்சரவையின் தலைவரும் பொருளாதார மேம்பாடு, வேலைவாய்ப்பு உருவாக்கம் மற்றும் வர்த்தக அமைச்சருமான விக் ஃபெடெலி அவர்களும் இந்த அறிவிப்பை வெளியிட்டனர்.

இந்த முதலீட்டின் மூலம், ஒன்ராறியோ நிறுவனங்கள் உலகத் தரமிக்க செயற்கை நுண்ணறிவுப் பொறியியலாளர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்களுடன் இணைந்து செயற்பட முடியும். இதனால் புதிய தொழில்நுட்பங்களைப் பொறுப்புடன் நடைமுறைப்படுத்தவும், உற்பத்தித்திறனை அதிகரிக்கவும், உலகச் சந்தையில் போட்டியிடவும் வாய்ப்பு உருவாகும்.

ஒன்ராறியோவில் தற்போது 1,600க்கும் மேற்பட்ட செயற்கை நுண்ணறிவு நிறுவனங்களும் சுமார் 30,000 வேலைவாய்ப்புகளும் உள்ளன. இத்தொழில்நுட்பத்தின் பயன்பாடு 2035ஆம் ஆண்டுக்குள் மாநிலத்தின் பொருளாதாரத்தில் 122 பில்லியன் டொலர் வளர்ச்சியை ஏற்படுத்துவதுடன், ஆண்டுதோறும் சராசரியாக 17,600 புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆராய்ச்சிக் கண்டுபிடிப்புகளை நடைமுறை வணிகப் பயன்பாடுகளாக மாற்றி, உள்ளூர் திறமையாளர்களையும் நிறுவனங்களையும் வளர்ப்பதே இந்த முதலீட்டின் முக்கிய நோக்கமாகும். இதன் மூலம் செயற்கை நுண்ணறிவு உருவாக்கும் வேலைவாய்ப்புகளும் பொருளாதாரப் பயன்களும் ஒன்ராறியோவிலேயே நிலைத்திருப்பதுடன், உலகளாவிய தொழில்நுட்பத் துறையில் மாநிலத்தின் முன்னணி நிலையும் மேலும் வலுப்பெறும்.

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>