கனடா- கியுபெக் மாகாணத்தில் இயங்கிவரும் ‘கியுபெக் தமிழ் மரபுத் திங்கள் கூட்டமைப்பு’ நடத்திய பிரமாண்டமான ‘ கியுபெக் தமிழ் மரபுத் திங்கள்-2026

Share

மொன்றியால் கலைஞர்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் உட்பட நூற்றுக்கணக்கானவர்களுடன். உலகெங்கும் புகழுடன் பேசப்பெறும் ‘ராப்’ பாடகர் வாகீசன் இராசையா, அவரது மேடைச் சகாக்களான அட்விக் மற்றும் திசோன் கலந்து சிறப்பித்த தமிழர் விழா

கனடா- கியுபெக் மாகாணத்தில் இயங்கிவரும் ‘கியுபெக் தமிழ் மரபுத் திங்கள் கூட்டமைப்பு’ நடத்திய பிரமாண்டமான ‘ கியுபெக் தமிழ் மரபுத் திங்கள்-2026 அங்குள்ள 50 இற்கும் அதிகமான தமிழர் அமைப்புக்கள் இணைந்து நடத்திய தமிழர் விழா கடந்த 18-01-2026 ஞாயிற்றுக் கிழமையன்று மிகவும் சிறப்பாக நடைபெற்றது.

பல மொன்றியால் அமைப்புக்கள் இணைந்து உள்ளுர்க் கலைஞர்களும் மொன்றியால் அரசியல் பிரமுகர்களும் அவர்களில் ஒருவராக முதற்தடவையாக நகரசபை அங்கத்தவராக தேர்ந்தெடுக்கப்பெற்ற மெலனி தியாகராஜா உட்பட பல பிரமுகர்கள் கலந்து சிறப்பித்தனர்
அத்துடன் ரொறன்ரோவிலிருந்து அரசியல் தலைவர்களும் குறிப்பாக தமிழ் பேசும் பாராளுமன்ற உறுப்பினர்களான அமைச்சர் ஹரி ஆனந்தசங்கரி மற்றும் யுனிற்றா நாதன் ஆகியோரும் மற்றும் கனடிய தமிழர் வர்த்தக சம்மேளனத்தின் தலைவர் அரி அரன் அவர்கள் தலைமையில் இயக்குனர் சபை உறுப்பினர்கள் பலர் மற்றும் கனடா உதயன் பிரதம ஆசிரியர் வர்த்தகப் பிரமுகர்கள் சங்கர் நல்லதம்பி மற்றும் ‘விஜயா நகை மாளிகை’ உரிமையாளர் ரூபன் அவர்கள் ஆகியோரும் ஸ்காபுறோ தமிழ்ச் சமூக மையத்தின் நிதி சேகரிப்புக் குழுவின் சார்பில் குபேஸ் நவரட்னம ஆகியோர் உட்பட பலர் ரொறன்ரோ மாநகரிலிருந்து கலந்து சிறப்பித்தனர்.

கனடா- கியுபெக் மாகாணத்தில் இயங்கிவரும் ‘கியுபெக் தமிழ் மரபுத் திங்கள் கூட்டமைப்பு’ நடத்திய பிரமாண்டமான ‘ கியுபெக் தமிழ் மரபுத் திங்கள்-2026 இவ்வருட விழாவில் முக்கிய அம்சமாக கனடாவில் உள்ள மூன்று ஊடகங்களைச் சேர்ந்தவர்களுக்கு சிறப்புக் கௌரவம் செய்யும் நிகழ்வும் இடம்பெற்றது ஐயா4யு உரிமையாளர் திரு. பேரின்பநாதன்- தமிழ்;வண் தொலைக்காட்சி அதிபர் ஶ்ரீ அவர்கள் மற்றும் மொன்றியால் ஐதமிழ் இணைய ஊடகத்தின் சார்பில் காந்தி அவர்கள் ஆகியோர் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான
ஹரி ஆனந்தசங்கரி அவர்களால் கௌரவிக்கப்பெற்றனர்.

மேற்படி விழாவில் கியுபெக் மாகாணத்தைச் சேர்ந்த மத்திய-மாகாண மற்றும் உள்ளாட்சி அரசுகள் சா ர்பாக தேர்ந்தெடுக்கப்பெற்ற அமைச்சர்கள் மற்றும் அங்கத்தவர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

–தகவர் சத்தியன்- படங்கள் -ஐயா4யு

 

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>