பு.கஜிந்தன்
கனடா செல்வதற்கு நிதி வசதி இல்லாத காரணத்தால் இளைஞன் ஒருவர் 22ம் திகதி செவ்வாய்க்கிழமை அன்றையதினம் தவறான முடிவெடுத்து தூக்கிட்டு உயிர்மாய்த்துள்ளளார். இவ்வாறு யாழ்ப்பாணம் – வைத்தியசாலை வீதி பகுதியை சேர்ந்த லிங்கேஸ்வரன் கிரிஸ்டியன் (வயது 30) என்பவரே உயிரிழந்துள்ள இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,
குறித்த நபர் கனடா செல்வதற்கு நீண்ட நாட்களாக திட்டமிட்டிருந்தார். இருப்பினும் நிதி வசதி இல்லாத காரணத்தால் யாழ்ப்பாணம் – ஆரியகுளம் பகுதிக்கு அருகில் உள்ள காணியில், மரத்தில் தூக்கிட்டு உயிர்மாய்த்துள்ளளார்.
அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார் உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167"
crossorigin="anonymous"></script>
<ins class="adsbygoogle"
style="display:block; text-align:center;"
data-ad-layout="in-article"
data-ad-format="fluid"
data-ad-client="ca-pub-2268409811114167"
data-ad-slot="7294005735"></ins>
<script>
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
</script>