கனடா தமிழ் எழுத்தாளர் இணையத்தின் ‘கதைச்சரம்’ சிறுகதைத் தொகுப்பு வெளியீட்டு விழா சிறப்பாக நடைபெற்றது

Share

குரு அரவிந்தன்

கடந்த 13-7-2025 திகதி ஞாயிற்றுக் கிழமையன்று கனடா தமிழ் எழுத்தாளர் இணையத்தின் ‘கதைச்சரம்’ என்ற சிறுகதைத் தொகுப்பு ரொறன்ரோவில் உள்ள பைரவி நுண்கலைக் கூடத்தின் கலையரங்கில் வெளியிட்டு வைக்கப்பெற்றது.

தேனீர் சிற்றுண்டியைத் தொடர்ந்து மங்கள விளக்கேற்றி தமிழ்தாய் வாழ்த்து, கனடா தேசியப்பண் ஆகியன செல்வி சோலை இராச்குரார், செல்வி சென்னி இராச்குமார் ஆகியோரால் இசைக்கப் பெற்றன. அதைத் தொடர்ந்து அகவணக்கம் இடம் பெற்றது.

தொடர்ந்து வரவேற்புரையை முன்னாள் தலைவரும், தற்போதைய துணைத் தலைவருமான குரு அரவிந்தன் வழங்கினார். அதன்பின் தற்போதைய தலைவர் ரவீந்திரநாதன் கனகசபையின் தலைமையுரை இடம் பெற்றது.

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>