28-03-2026 சனிக்கிழமையன்று மாலை கனடா மார்க்கம் நகரில் அமைந்துள்ள மிடில்பீல்ட் கல்லூரி கலையரங்கில் மேடையேற்றப்பெற்ற கனடா- திருமறைக் கலா மன்றத்தின் படைப்பான’அன்பில் மலர்ந்த அமரகாவியம்’ என்னும் ஆற்றுகை. இயேசு பிரானின் 40 நாள் தவக்காலத்தை தத்ரூபமாக காட்டியது என்றால் மிகையாகாது.
யாழ்ப்பாணத்தில் அமரராகிவிட்ட மரியசேவியர் அடிகள் அவர்களால் நிறுவப்பெற்ற இந்த திருமறைக் கலாமன்றத்தின் கனடா கிளை கடந்த பல வருடங்களாக இவ்வாறான அற்புதமான இயேசு காவியங்களை மேடையேற்றி வருகின்றது. அதில் முக்கிய அங்ககத்தவர்களாக விளங்கும் பலர் கலை இலக்கிய மற்றும் கூத்து பற்றிய ஆழ்ந்த அனுபவமும் அர்ப்பணிப்புடன் கலைப் பணியை மக்களி பணியுடன் இணைத்து ஆற்றும் இதயசுத்தியும் நிறைந்தவர்களாக விளங்குவதால் அவர்கள் சமர்ப்பணம் செய்கின்ற படைப்புக்களும் அதன் மகிமையை மக்களுக்கு கலைத்துவமான உத்திகளுடன் மேடையில் காட்சிப்படுத்த உதவுகின்றன.
இந்த ‘அன்பில் மலர்ந்த அமரகாவியம்’ என்னும் ஆற்றுயில் பங்களித்த நூற்றுக்கு மேற்பட்ட கலைஞர்களும் குழந்தைக் கலைஞர்களும் கூட்டாக தங்கள் கலைப் பங்களிப்பை நேர்த்தியாக வழங்கியதால் அந்த மண்டபத்தில் அமைதியாகவும் பக்தியில் உருகியவர்களாகவும் இருந்து கண்டு களித்த பார்வையாளர்கள் தங்கள் இருப்பை மறந்து இறைவனுக்கு அருகில் அமர்ந்திருந்து பார்ப்பது போன்று அனுபவித்தார்கள்
தவக்காலம் என்னும் இயேசுபிரானின்ன் 40 நாள் தவத்தையும், அதற்குள் அடங்கும் பாடுகள’ மற்றும் மரணம் மற்றும் உயிர்ப்பையும் தியானிக்கும் 40 நாள் புனித காலமான இந்த நாட்கள். திருநீற்றுப் புதனில் தொடங்கி, பெரிய வெள்ளிக்கிழமையன்று சிலுவை மரணத்தையும், ஈஸ்டர் ஞாயிறன்று உயிர்ப்பையும் கொண்டாடும் கிறிஸ்தவர்கள், இக்காலத்தில் செபம், தவம், தானம் மற்றும் மனமாற்றம் மூலம் இறைவனுடன் இணைந்திருக்கும் அனுபவத்தை சனிக்கிழமை மேடையேற்றப்பெற்ற படைப்பின் மூலம் கிறிஸ்த்தவர்கள் மாத்திரமல்ல பார்த்து ரசித்த கலை அபிமானிகளும் கண்கள் கலங்கி வண்ணம் இல்லம் ஏகினார்கள் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.