கனடா- பிக்கரிங் நகரில் அமைந்துள்ள அருள்ஜோதி சிவாலயத்தின் சார்பில் தமிழ்நாடு பேராசிரியர் சங்கரநாராயணனுக்கு வழங்கப்பெற்ற சிறப்புப் பட்டம்

Share

கனடா- பிக்கரிங் நகரில் அமைந்துள்ள அருள்ஜோதி சிவாலயத்தின் சார்பில் கனடா உதயன் சர்வதேச விருது விழாவில் வாழ் நாள் சாதனையாளர் விருது வழங்கிக் கௌரவிக்கப்பெற்ற தமிழ்நாடு பேராசிரியர் சங்கரநாராயணனுக்கும் கனடா உதயன் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் நாகமணி லோகேந்திரலிங்கம் அவர்களுக்கும் சிறப்புப் பட்டங்கள் வழங்கப்பெற்றன.

கடந்த சனிக்கிழமையன்று ஆலய மண்டபத்தில் நடைபெற்ற சிறப்புப் பூஜைகள் மற்றும் அபிசேகங்கள் ஆகியவற்றைத் தொடர்ந்து ஆலயத்தின் குரு முதல்வர் கலைமாமணி சாம்பசிவக் குருக்கள் அவர்களால் தமிழ்நாடு பேராசிரியர் சங்கரநாராயணனுக்கு ‘ஆன்மீக சொற்சுடர்’ மற்றும் கனடா உதயன் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் நாகமணி லோகேந்திரலிங்கம் அவர்களுக்கு ”ஊடகக் கலா வினோதன்” ஆகிய சிறப்புப் பட்டங்கள் வழங்கப்பெற்றன.

நூற்றுக்கணக்கான பக்தர்கள் மற்றும் இருபத்தைந்துக்கு மேற்பட்ட இந்துக் குருமார்கள் ஆகியோர் அமர்ந்திருந்த ஆலய மண்டபத்தில் இந்த சிறப்புக் கௌரவங்கள் இடம்பெற்றன என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>