கனடா- புங்குடுதீவு பழைய மாணவர்கள் சங்கம் நடத்திய சிறப்புக்கள் பல நிறைந்த வருடாந்த ஒன்றுகூடல்- 2024

Share

வர்த்தகப் பிரமுகர் உதயன் குணராஜா அவர்களைத் தலைவராகக் கொண்டியங்கும் கனடா- புங்குடுதீவு பழைய மாணவர்கள் சங்கம் நடத்திய சிறப்புக்கள் பல நிறைந்த வருடாந்த ஒன்றுகூடல்- 2024 கடந்த 4ம் திகதி ஞாயிற்றுக்கிழமை மிலிக்கன் பார்க் மைதானத்தில் சிறப்பாக நடைபெற்றது.

காலை தொடக்கம் இருள் நெருங்கும் நேரம் வரை பல்வேறு கலை நிகழ்ச்சிகள் மற்றும் பொழுது போக்கு நிகழ்ச்சிகள் மற்றும் விளையாட்டுக்கள் என அனைத்து கண்களைக் கவரும் நிகழ்ச்சிகளுடன் மேற்படி ஒன்றுகூடல் தொடர்ந்து சென்றது.

அத்துடன் காலை. மதியம். மற்றும் பிற்பகல் நேரங்களுக்கான பல வகையான உணவு வகைகள் அ ங்கு அனைவருக்கும் பரிமாறப்பெற்றன. அத்துடன் சிறுவர் சிறுமியர்களுக்கு ஏற்ற உணவும் அங்கு தாராளமாக பரிமாறப்பட்டது.

கனடா- புங்குடுதீவு பழைய மாணவர்கள் சங்கத்தின் தற்போதைய நிர்வாக சபை உறுப்பினர்களும் அவர்களோடு இணைந்து முன்னைய காலப்பகுதிகளின் நிர்வாக சபை உறுப்பினர்களோடும் சேர்ந்து புங்குதீவைப் பிறப்பிடமாகக் கொண்ட கனடா வாழ் குடும்பங்கள் அனைத்தும் இவ்வருடத்தின் ஒ ன்று கூடல் சிறப்பாக அமைய பக்கபலமாக இருந்தனர் என்றால் அது மிகையாகாது.

—சத்தியன்

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>