கனடா- ஸ்காபுறோவில் அழகுற இடம்பெற்ற குரு ஶ்ரீமதி ரேணுகா விக்னேஸ்வரனின் மாணவி அதுஸ்கா கிரிபரனின் பரத நாட்டிய அரங்கேற்றம்

Share

ஸ்காபுறோவில் கடந்த பல வருடகளாக வெற்றிகரமாக இயங்கிவரும் குரு ஶ்ரீமதி ரேணுகா விக்னேஸ்வரன் அவர்களின் ‘கலையருவி’ நாட்டியப் பள்ளியின் சிரேஸ்ட மாணவி அதுஸ்கா கிரிபரனின் பரத நாட்டிய அரங்கேற்றம் கடந்த 06-07-2025 அன்று ஞாயிற்றுக்கிழமை அன்று சீனக் கலாச்சார மண்டபத்தில் அழகுற இடம்பெற்றது.

அரங்ககேற்றச் செல்வி அதுஸ்கா கிரிபரன் தனது அபாரத்திறமை மற்றும் அயராத பயிற்சி ஆகியவற்றை மூலதனமாகக் கொண்டு தனது குருவின் அர்ப்பணிப்புள்ள நடனப் பயிற்சிகளை சிறப்பாகவும் அவதானமாகவும் கவனித்துப் பயின்று அன்றையை அரங்கேற்றத்தை அனைவரும் பாராட்டும் வகையில் சமர்ப்பித்தார்.

மண்டபம் நிறைந்த இந்த அரங்கேற்றத்திற்கு இங்குள்ள நடன மற்றும் இசையாசிரியர்களும் கலந்து கொண்டு சிறப்புச் செய்தார்கள்.

இங்க காணப்படும் படங்களில் குரு ஶ்ரீமதி ரேணுகா விக்னேஸ்வரன் அவர்கள் தனது துணைவர் விக்னேஸ்வரன் சகிதம் அதுஸ்கா கிரிபரனுக்கு அரங்கேற்றச் சான்றிதழ் மற்றும் கேடயம் ஆகியவற்றை வழங்கிப் பாராட்டுவதையும் மிருதங்க வித்துவான் கௌரி சங்கர் அவர்களை மேடையில் அதுஸ்கா கிரிபரனின் பெற்றோர் கௌரவிப்பதையும் பக்க வாத்தியக் கலைஞர்கள் அன்றைய குரு ஶ்ரீமதி ரேணுகா விக்னேஸ்வரன் சகிதம் மேடையில் தங்கள் பணியை தொடர்வதையும் மாணவி அதுஸ்கா கிரிபரனின் நடனத்தோற்றங்கள் சிலவற்றையும் இங்கு காணலாம்

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>