கனடா -ஸ்காபுறோவில் நடைபெறவுள்ள பொங்கு தமிழ்-2024 – தமிழர் எழுச்சி விழா

Share

கனடா ஸ்காபுறோ நகரில் மோர்னிங்சைட்-பின்ச் சந்திக்கு அருகில் அமைந்திருக்கும் திறந்த வெளி மைதானத்தில் எதிர்வரும் செப்டம்பர் 1ஆம் திகதி பொங்கு தமிழ் -2024 என்னும் எழுச்சி விழா நடைபெறவுள்ளதாக சில நாட்களுக்கு முன்னர் நடைபெற்ற ஊடக நிறுவனங்களின் பிரதிநிதிகளோடு நடத்திய பத்திரிகையாளர்கள் சந்திப்பில் விழா ஏற்பாட்டாளர்களால் அறிவிககப்பட்டுள்ளது.

கனடிய தமிழ்ச் சமூகம் மற்றும் கனடிய தமிழ் மாணவர்கள் சமூகம் ஆகியவற்றின் சா ர்பில் நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ள இந்த எழுச்சி விழா தொடர்பான ஏற்பாடுகள் ஏற்கெனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது

தன்னாட்சி உரிமை, மரபுவழித் தாயகம், தமிழ்த் தேசியம் என்ற தமிழர்களின் வேட்கையின் வெளிச்சமாகத் திகழும் இந்த கோட்பாடுகளை முன்வைத்து நடைபெறவுள்ள பொங்கு தமிழ் -2024 என்னும் எழுச்சி விழா சிறப்புற நடைபெற அனைவரையும் ஒத்துழைக்குமாறும் அன்றைய ஊடகப்பிரதிகளின் சந்திப்பின் போது எடுத்துரைக்கப்பட்டது.

கனடா உதயன் பத்திரிகை சார்பில் அதன் பிரதம ஆசிரியர் லோகேந்திரலிங்கம் கலந்து கொண்டார்.

விழா தொடர்பான விளம்பரங்களையும் செய்திகளை தமது பத்திரிகை தொடர்ச்சியாக பிரசுரம் செய்யும் என்றும் அவர் அங்கு வாக்குறுதியளித்தார்.

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>