ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ’கருப்பு’. டிரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள கருப்பு திரைப்படத்தின் கதாநாயகியாக திரிஷா நடித்துள்ளார். சாய் அபயங்கர் இசையமைத்துள்ள இப்படத்தில் சுவாசிகா, இந்திரன்ஸ், யோகி பாபு, ஷிவாதா, சுப்ரீத் ரெட்டி, அனகா மயா ரவி, நட்டி நட்ராஜ் உள்பட பலர் முக்கிய காதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். கருப்பு திரைப்படம் வரும் 14ம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது. இந்நிலையில் ’கருப்பு’ படம் குறித்து புதிய பதிவேற்றத்தை ஆர்.ஜே.பாலாஜி வெளியிட்டுள்ளார். அதன்படி, ’கருப்பு’ படத்தின் ‘கருப்பு கூட வா’ பாடல் இன்று மாலை வெளியாகும் என்று ஆர்.ஜே.பாலாஜி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ஆர்.ஜே.பாலாஜி வெளியிட்ட எக்ஸ் பதிவில், கருப்புசாமியை நம்பும் கோடிக்கணக்கான மக்களின் வாழ்க்கையில் முக்கியமான பாடலாக இருக்கப் போகும் “கருப்பா கூட வா” பாடல் இன்று மாலை வெளியாக உள்ளது. அந்த பாடலை கேட்கும்போதெல்லாம் எனக்கு சிலிர்ப்பு ஏற்படுகிறது’ இவ்வாறு தெரிவித்துள்ளார்.
’கருப்பு’ படம் குறித்து ஆர்.ஜே.பாலாஜி புதிய பதிவேற்றம்
<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167"
crossorigin="anonymous"></script>
<ins class="adsbygoogle"
style="display:block; text-align:center;"
data-ad-layout="in-article"
data-ad-format="fluid"
data-ad-client="ca-pub-2268409811114167"
data-ad-slot="7294005735"></ins>
<script>
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
</script>