ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் ‘கருப்பு’ என்ற படத்தில் சூர்யா நடித்துள்ளார். திரிஷா கதாநாயகியாக நடித்துள்ளார். அனகா, இந்திரன்ஸ், நட்டி நட்ராஜ், சுவாசிகா என பலரும் நடித்துள்ளனர்.
‘கருப்பு’ படம் கடந்த ஆண்டு தீபாவளி பண்டிகைக்கு வெளியாவதாக இருந்தது. பின்னர் பொங்கல் பண்டிகைக்கு வெளியிடலாம் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனாலும் படத்தின் வெளியீடு தொடர்ந்து தள்ளிப்போய் கொண்டிருக்கிறது. கோடைக்கால வெளியீடாக ‘கருப்பு’ படத்தை வருகிற ஏப்ரல் மாதம் திரைக்கு கொண்டுவர படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், ‘கருப்பு’ படத்தை பார்த்த இசையமைப்பாளர் சாய் அபயங்கர் கீச்சகத்தில் பதிவொன்றை வெளியிட்டுள்ளார். அதில், “இப்போதுதான் கருப்பு திரைப்படத்தின் இறுதி வடிவத்தை பார்த்தேன். காத்திருப்புக்கு மிக தகுதியானது” என தெரிவித்துள்ளார்.
<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167"
crossorigin="anonymous"></script>
<ins class="adsbygoogle"
style="display:block; text-align:center;"
data-ad-layout="in-article"
data-ad-format="fluid"
data-ad-client="ca-pub-2268409811114167"
data-ad-slot="7294005735"></ins>
<script>
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
</script>