சூர்யாவின் திரையுலக பயணத்தில் புதிய வசூல் சாதனையை ‘கருப்பு’ படம் பதிவு செய்துள்ளது. நடிகர் சூர்யா நடிப்பில் உருவான கருப்பு கடந்த சில நாள்களாக தமிழக திரையரங்குகளில் சாமியாடிக்கொண்டிருக்கிறது என்றாலும் மிகையாகாது. விடுமுறை நாள்களுக்கு வந்த கூட்டம் வேலை நாள்களிலும் தொடர்ந்து வந்துகொண்டிருக்கிறது. ஏற்கெனவே, ‘கருப்பு’ படம் உலகளவில் ரூ.220 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது நடிகர் சூர்யாவின் சினிமா கேரியரில், திரையரங்குகள் மூலம் மட்டும் ரூ.200 கோடிக்கும் அதிகமாக வசூலை கடந்த முதல் திரைப்படமாக ‘கருப்பு’ உருவெடுத்துள்ளது. இந்நிலையில், ‘கருப்பு’ திரைப்படம் தமிழ்நாட்டில் மட்டும் ரூ. 130 கோடி வசூலித்ததாக படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167"
crossorigin="anonymous"></script>
<ins class="adsbygoogle"
style="display:block; text-align:center;"
data-ad-layout="in-article"
data-ad-format="fluid"
data-ad-client="ca-pub-2268409811114167"
data-ad-slot="7294005735"></ins>
<script>
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
</script>