கரூரில் தமிழக வெற்றிக்கழக பிரசார கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த சம்பவம் தொடர்பாக ஒரு நபர் ஆணைய விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் பாதிக்கப்பட்டவர்களிடம் இந்த 2-வது நாளாக விசாரணை நடத்தினார். காவல்துறை சார்பில் கரூர் டிஎஸ்பி செல்வராஜ் நியமிக்கப்பட்டு தனியாக விசாரணை நடத்தப்பட்டு வந்தது. அவர் ஐந்துக்கும் மேற்பட்ட தனிப்படைகள் அமைத்து விசாரணையை தீவிரபடுத்தினார். இந்த நிலையில் டிஎஸ்பி மாற்றம் செய்யப்பட்டு கரூர் கூடுதல் துணை காவல்துறை கண்காணிப்பாளர் பிரேமானந்த் புதிய விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டார். அவர் சம்பவ இடமான வேலுச்சாமி புரத்தை பார்வையிட்டு விசாரணையை தொடங்கினார். இந்நிலையில், கரூர் விஜய் பிரச்சாரத்தில் 41 பேர் பலியான வழக்கில் த.வெ.க. பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்தை இரவுக்குள் கைது செய்ய காவல்துறை தீவிரமாக ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. கரூர் ஏ.டி.எஸ்.பி. பிரேமானந்தன் தலைமையிலான தனிப்படை காவல்துறை கைது செய்ய நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது.
கரூர் கூட்ட நெரிசல் உயிரிழப்பு: புஸ்ஸி ஆனந்தை கைது செய்ய காவல்துறை தீவிரம்
<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167"
crossorigin="anonymous"></script>
<ins class="adsbygoogle"
style="display:block; text-align:center;"
data-ad-layout="in-article"
data-ad-format="fluid"
data-ad-client="ca-pub-2268409811114167"
data-ad-slot="7294005735"></ins>
<script>
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
</script>