கர்நாடக மாநிலம் பாகல்கோட் மாவட்டம் ஜகமண்டி தாலுகா பகுதிக்கு கரும்பு வெட்டுவதற்காக மகாராஷ்டிரா மாநிலம் யுவத்மால் மாவட்டத்தை சேர்ந்த தொழிலாளர்கள் சிலர் வந்திருந்தனர். அவர்கள் அதிகாலை 2 மணியளவில் வெட்டப்பட்ட கரும்புகளை டிராக்டரில் அடுக்கி அதன் மேல் அமர்ந்து பயணம் செய்தனர். அப்போது திடீரென கட்டுப்பாட்டை இழந்த டிராக்டர் சாலையோரம் கவிழ்ந்தது. இதில் டிராக்டரில் பயணம் செய்த மகாராஷ்டிராவை சேர்ந்த கரும்பு வெட்டும் தொழிலாளர்கள் மணீஷ் பாண்டே (23), லட்சுமிசிராமதி (27), ரேகா பூகே மற்றும் 2 வயது குழந்தை ஹலகி பாண்டே ஆகிய 4 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானார்கள். இந்த விபத்து பற்றி தெரியவந்ததும் ஜகமண்டி காவல்துறை சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பலியான 4 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கர்நாடகாவில் டிராக்டர் கவிழ்ந்து விபத்து – குழந்தை உள்பட 4 பேர் உயிரிழப்பு
<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167"
crossorigin="anonymous"></script>
<ins class="adsbygoogle"
style="display:block; text-align:center;"
data-ad-layout="in-article"
data-ad-format="fluid"
data-ad-client="ca-pub-2268409811114167"
data-ad-slot="7294005735"></ins>
<script>
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
</script>