திருநெல்வேலி, மனுஜோதி ஆசிரமத்தின் சார்பில், இந்த “வேமன பத்யாம்ருதம்” என்ற தெலுங்கு நூல், ஆந்திர மாநிலத்தின் கர்னூலில் ஸ்ரீமந் நாராயணர் ஸ்ரீ லஹரி கிருஷ்ணா அவர்களின் தெய்வீக பிரசன்னத்தில் கோலாகலமாக வெளியிடப்பட்டது. ஸ்ரீ தேவாசீர் லாறி அவர்கள், யோகி வேமனா எழுதிய பல கவிதைகளில் சிலவற்றைத் தேர்ந்தெடுத்து, ஸ்ரீ லஹரி கிருஷ்ணாவின் கோட்பாடுகளிலுள்ள ஆன்மீக கருத்துக்களோடு ஒப்பிட்டு, இந்த நூலை தொகுத்து எழுதியுள்ளார். ஸ்ரீ லஹரி கிருஷ்ணா அவர்கள் கூறியுள்ள “ஒன்றே குலம்! ஒருவனே தேவன்!” என்ற கொள்கையின்படி, இன்றைய இளைஞர்கள் கூட எளிதில் புரிந்துகொள்ளும் வகையில் இந்த நூல் சுருக்கமான வடிவில் அச்சிடப்பட்டுள்ளது. இந்த வேமன பத்யாம்ருதம் – இறை பக்தி, பெற்றோரை மதித்தல், ஆசிரியர்களை மதித்தல், போன்ற நல்ல ஆன்மீக விஷயங்களுடன் தொடர்புடையது. ஸ்ரீமத் பகவத் கீதைக்கு இணையாகக் கருதப்படும் இத்தகைய நூல்கள், பல மொழிகளில் அச்சிடப்பட்டு, நாடு முழுவதும் மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் இலவசமாக விநியோகிக்கப்படுகின்றன. இதுபோன்ற ஆன்மீக நூல்களைப் படிப்பதன் மூலம் ஒருவர் விலைமதிப்பற்ற இறை ஞானத்தை பெறலாம். மனுஜோதி ஆசிரமத்தின் நிர்வாகி லியோ பால் கொலம்பஸ் லாறி மற்றும் ரோஜர் தேவா இந்திரன் ஆகியோர் இவ்விழாவினை சிறப்பாக ஏற்பாடு செய்து, மேற்கண்ட கருத்துகளையும்; இறைவனோடு நம்மை எவ்வாறு அர்ப்பணித்து வாழ வேண்டும் என்ற விழிப்புணர்வையும் ஏற்படுத்தினார்கள். பல ஆன்மீகப் பேச்சாளர்கள், கவிஞர்கள், எழுத்தாளர்கள், அரசியல் தலைவர்கள் மற்றும் பலர் இந்தப் புத்தக வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
கர்னூல் நகரில் “வேமன பத்யாம்ருதம்” தெலுங்கு நூல் வெளியிடப்பட்டது
<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167"
crossorigin="anonymous"></script>
<ins class="adsbygoogle"
style="display:block; text-align:center;"
data-ad-layout="in-article"
data-ad-format="fluid"
data-ad-client="ca-pub-2268409811114167"
data-ad-slot="7294005735"></ins>
<script>
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
</script>