கலாநிதி ஸ்ரீமான் செல்வத்துரை குருபாதம் அவர்களின் ஓராண்டு நிறைவும் நினைவும் | Hon. Dr. S. Gurupatham

Share

அகர வரிசையில் என் அன்புக்கவிதை

அறிவுக்களஞ்சியமாம், அதிலும் அட்சய பாத்திரமாம்
ஆய்வின் பொக்கிஷமாம் ஆற்றல் பல கொண்டவராம்,
இயற்கையும் இயல்புமாம், இங்கிதம் நிறைந்தவராம்,
ஈன்றெடுத்த நூல்களையும் ஈதலில் வள்ளலாம்
உலகத்தமிழ் வானொலியாம் கீதவாணியில் பேச்சாளராம்,
ஊற்றெடுக்கும் எண்ணங்களால் ஊடகங்களில் ஆளுமையாம்
எதற்கும் எமனுக்கும் அஞ்சாதவராம் எல்லோராலும் போற்றப்படுபவனாம்
ஏடுகள் பல படைத்து ஏற்றத்தாழ்வு அற்றவனாய் வாழ்ந்து
ஜயம் திரிபற அறிந்தவற்றை ஜயமின்றியே சொற்சிலம்பாடி
ஒன்றே குலமென்றும் இயற்கையே தெய்வம் என்றும்
ஓங்கி எழுந்த பண்புடன் ஒவ்வொருவரின் சந்தேகத்திற்கும்
ஒளஷதமாய் வந்துதித்த தோழரே குருபாதமே
ஃதும் ஐயமின்றி உங்கள் மலரடியில் இதை சமர்ப்பிக்கின்றேன்
எங்கேயிருந்து சிந்திக்கின்றீர்களோ! மீண்டும்
உங்களைத்தான் சந்திக்க முடியுமா??

அன்புத்துயருடன் என்றென்றும் உங்கள் ஜெயா
திருமதி. ஜெயஜோதி குருபாதம் (nee Paramsothy)
Teacher: TDSB, Canada &
வேம்படி மகளிர் கல்லூரி, யாழ்ப்பாணம்
(முன்னாள் ஆசிரியை) Tel: (416) 398-7241

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>