கலிபோர்னியா பனிச்சரிவு: சிக்கிய 15 பேரில் 6 பேர் மீட்பு 9 பேர் மாயம்

Share

அமெரிக்காவின் வடக்கு கலிபோர்னியாவின் காஸில் பீக் பகுதியில் ஏற்பட்ட பனிச்சரிவில் 15 பேர் சிக்கி கொண்டனர். எனினும், பனிக்கட்டிகளுக்கும், பனிச்சரிவுகளுக்கும் மத்தியில் அவர்கள் தவித்து வந்தனர். அவர்களை மீட்கும் பணியில் மீட்பு குழுவினர் ஈடுபட்டனர். இதில் மீட்கப்பட்ட 6 பேரில், 2 பேர் சிகிச்சைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இதனை நிவாடா கவுன்டியின் செய்தி தொடர்பாளர் ஆஷ்லே குவாத்ரோஸ் தெரிவித்து உள்ளார். எனினும், காணாமல் போன மீதமுள்ள 9 பேரை தேடும் பணியில் மீட்பு படையினர் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால், சக்தி வாய்ந்த பனிப்புயல் தாக்கமும் அந்த பகுதியில் காணப்படுகிறது. இதனால், மீட்பு பணியில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது. ஏற்கனவே பல மணிநேர போராட்டத்திற்கு பின்னரே 6 பேர் மீட்கப்பட்டனர். இதனை தொடர்ந்து மீதமுள்ளவர்களை மீட்கும் பணியும் பாதிக்கப்பட்டு உள்ளது.

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>